Bigg boss tamil 7: ப்ரெண்ட் போயிட்டாங்க பொட்டிய தூக்கிக்கிட்டு.. மாயா வருத்தம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவுற்ற நிலையில் தற்போது 7வது சீசனும் 96வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியில் 16 லட்சம் ரூபாய் சேர்ந்திருந்த நிலையில், பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு பூர்ணிமா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்றைய தினத்திற்கான முதல் பிரமோவில் மர்மநபர் பணப்பெட்டியில் 16 லட்சத்தை வைத்த நிலையில், அதை எடுத்துக் கொண்டு தான் வெளியேறுவதாக பூர்ணிமா அறிவித்தார். இதையடுத்து இது குட் மூவ் என்று விஷ்ணு கமெண்ட் செய்தார். தொடர்ந்து விசித்ராவிடமும் சொல்லிக் கொண்டு பூர்ணிமா கிளம்பிய நிலையில் அவர் அதிர்ச்சியுடன் வழியனுப்பினார். மாயா மற்றும் பூர்ணிமா கட்டித்தழுவி தங்களது பிரிவை அதன் வருத்தத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது பாடலுக்கு அனைவருடனும் சேர்ந்து ஆட்டம் போட்டார் பூர்ணிமா.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (5th January 2024) episode promo

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டு இன்றைய தினம் 96வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில் இந்த சீசனில் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் புகுத்தினர். கடந்த 6 சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்ஷன், மிட் வீக் எவிக்ஷன் என நிகழ்ச்சி களைகட்டியது. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் எப்போதும் சக போட்டியாளர்களுடன் மல்லு கட்ட தயாராக இருந்ததை பார்க்க முடிந்தது.

துவக்க போட்டியாளர்கள்: நிகழ்ச்சியின் துவக்கம் முதலே மாயா, விஷ்ணு, பூர்ணிமா, விசித்ரா உள்ளிட்டவர்கள் மாஸ் காட்டி வந்த நிலையில், இடையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த தினேஷ், அர்ச்சனாவும் நிகழ்ச்சியின் பரபரப்பிற்கு நாங்க இருக்கோம் என்று முன்னணியில் நின்றனர். இவர்களின் அடுத்தடுத்த அட்ராசிட்டிக்களால் பிக்பாஸ் வீடுகள் மட்டுமில்லாமல் நிகழ்ச்சியும் இரண்டானது. நித்தம் வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுக்க நாங்களாச்சு என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ரூம் போட்டு யோசித்த நிலையில், நிகழ்ச்சியில் வித்தியாசமான டாஸ்க்குகள் தொடர்ந்து அரங்கேறின.

ஏராளமான சர்ச்சைகள்: நிகழ்ச்சியில் துவக்கம் முதலே விமர்சனங்களுக்கும் அதிக ஸ்பேஸ் காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் வர்மா, பிரதீப் என இருவரும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், பிரதீப்பின் எலிமினேஷன் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசனும் இந்த சர்ச்சைகளை சந்தித்தார். தற்போது வரை இந்த நிகழ்ச்சி பிரதீப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. தற்போதும் நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த பதிவுகளை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும்நிலையில், அவை உற்று நோக்கப்பட்டு வருகின்றன.

அடுத்தடுத்த பிரமோக்கள்: இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில், முதல் பிரமோவில் கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியில் இருந்த 16 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு நடையை கட்டினார் பூர்ணிமா. இதையடுத்து அவரை ஆட்டம் பாட்டத்துடன் சக ஹவுஸ்மேட்ஸ் வழியனுப்பி வைத்தனர். விசித்ரா, மாயா என அடுத்தடுத்த போட்டியாளர்கள் தங்களது வருத்தத்தையும் பதிவு செய்தனர். அவரது இந்த செய்கையை குட் மூவ் என்று விஷ்ணு கமெண்ட் செய்தார். தான் மற்றவர்களை அட்டாக் செய்ததற்கு அவர் அனைவரின் முன்னிலையில் கீழே விழுந்து மன்னிப்பு கேட்டார்.

மாயா வருத்தம்: இந்நிலையில் தற்போது அடுத்த பிரமோவும் வெளியாகியுள்ளது. இதில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியல் ஹீரோ மற்றும் ஹீரோயின் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தனர். மாயாவிடம் அவரது பிரெண்ட் குறித்து கேட்கப்பட்ட போது, பூர்ணிமா பொட்டியை தூக்கிக் கொண்டு போய் விட்டதாக வருத்தத்தை பதிவு செய்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் சின்ன மருமகள் சீரியல் பிரமோவும் ஒளிபரப்பப்பட்டது. இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் நிறைவுறவுள்ள நிலையில் விஜய் டிவியின் பல சீரியல்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X