Bigg boss 7: நான்தான் பணப்பெட்டியை கோட்டை விட்டுவிட்டேன்.. வருத்தத்தில் மாயா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 7வது சீசனை கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கிய நிலையில் இன்றைய தினம் 97வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எலிமினேஷன்கள், வைல்ட் கார்ட் சுற்றுகள் இருந்த நிலையில் தற்போது 7 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி காணப்படுகிறது. பணப்பெட்டியுடன் பூர்ணிமா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டைட்டில் வின்னர் குறித்த பல்வேறு கணிப்புகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது.

வாரயிறுதி நாளான இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதையொட்டி இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் பிரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், பணப்பெட்டி புறப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி கொள்ளும் ஆசையுடன் உள்ள போட்டியாளர்கள் குறித்தும் அவர் பேசினார். தொடர்ந்து இரண்டாவது பிரமோவிலும் அவர் பணப்பெட்டி குறித்தே கேள்விகளை கேட்டு ஹவுஸ்மேட்சின் கருத்துக்களை கேட்டறிந்தார். இன்னும் சில தினங்களில் நிறைவுறவுள்ள இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (6th January 2024) episode promos

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கியது. இந்த நிகழ்ச்சி தற்போது 6 சீசன்களை நிறைவு செய்துவிட்டு 7வது சீசனிலும் எண்ட் கார்ட் போடவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 97வது நாளில் என்ட்ரியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புகுத்தி வருகின்றனர்.

பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா: போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்த்திருந்த ப்ரீஸ் டாஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதையொட்டி போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் சொந்தங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று களைகட்ட செய்தனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பணப்பெட்டி வைக்கப்பட்டது. இதில் 3 நாட்கள் வைக்கப்பட்ட பணப்பெட்டியை நிகழ்ச்சியின் துவக்க ஆட்டக்காரர் பூர்ணிமா எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் வாரயிறுதி எபிசோடான இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.

அடுத்தடுத்த பிரமோக்கள்: நிகழ்ச்சியின் 97வது நாளான இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் பிரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், பணப்பெட்டி புறப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டார். மேலும் வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ், தான் பணப்பெட்டியை எடுத்து சென்றுவிட்டால், டைட்டிலுக்காக உருவாக்கப்பட்டுள்ள கோப்பை, 50 லட்சத்த யார் வாங்குவார்கள் என்று கவலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் வெற்றியாளர் ஒருவர்தான் என்பது குறித்து அவர்களின் சிந்தனை என்ன என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், பணப்பெட்டி வெளியேறினாலும் வீட்டில் இருக்கும் பகை குறித்தும் அவர் சட்டிக் காட்டினார்.

கமல் கேள்வி: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில், பணப்பெட்டியை எடுக்காமல் கோட்டை விட்டது யார் என்று கமல் கேள்வி எழுப்பினார். உடனே, இதற்கு பதிலளித்த தினேஷ் விசித்ராவை கைக்காட்டினார். அவரது இந்த பதிலால் விசித்ராவின் முகம் மாறியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து மணி, விஷ்ணு ஆகியோரும் விசித்ரா பணப்பெட்டியை எடுப்பார் என்று தாங்கள் கருதியதாக தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய விஜய் வர்மா, மணி பணப்பெட்டியை எடுத்திருந்தால் அவருக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

மாயா வருத்தம்: இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மாயா, தான் பணப்பெட்டியை கோட்டை விட்டு விட்டதாகவும் தான் கண்டிப்பாக அதை எடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதைகேட்டு கமல்ஹாசன் வாய்விட்டு சிரித்தார். இவ்வாறு தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்துவந்த பிக்பாஸ் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்னும் இரு தினங்களில் பிக்பாஸ் 7 போட்டியின் டைட்டில் வின்னர் குறித்து அறிய முடியும் என்பது உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X