Bigg boss tamil 7: மணியின் தனித்துவம் ரவீனாதான்.. கமல்ஹாசனை சிரிப்பூட்டிய மாயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்றும் நேற்றும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி இன்றைய தினம் 98வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரமோக்களில் போட்டியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூலாக பேசியதை பார்க்க முடிந்தது.
சீசன் துவக்கத்தில் இருந்தே பல்வேறு போட்டியாளர்களின் பிணக்குகளை பஞ்சாயத்து தீர்த்து வைத்து வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் பல்வேறு சர்ச்சைகளிலும் இந்த சீசனில் எதிர்கொண்டார். பிரதீப் எலிமினேஷன் உள்ளிட்டவற்றில் அவரது செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. மேலும் மாயாவிற்கு ஃபேவராக கமல் நடந்துக் கொள்வதாகவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவரை மாற்றிவிட்டு மற்றொருவரை இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக வைக்க வேண்டும் என்ற கருத்துக்களும் சமூகவலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டன.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 98வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் நுழைந்துள்ளதாக கமல்ஹாசனும் இன்றைய பிரமோவில் பேசினார். இன்றைய தினம் நிகழ்ச்சியின் 98வது நாளில் என்ட்ரி ஆகியுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக வெளியான முதல் பிரமோவில் இந்த வார எலிமினேஷன் குறித்து ஹவுஸ்மேட்சிடம் கேட்டறிந்த கமல்ஹாசன், தொடர்ந்து எலிமினேஷனை அறிவிக்க முயன்றதை பார்க்க முடிந்தது.
ஹவுஸ்மேட்சின் தனித்துவம்: தொடர்ந்து சக போட்டியாளர்களின் தனித்துவம் குறித்து ஹவுஸ்மேட்சிடம் கேட்டறிந்தார் கமல்ஹாசன். முன்னதாக கடைசி வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தினேஷ், விசித்ராவின் கெத்துதான் அவரது Unique selling point என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மாயா, யாரை எப்படி யூஸ் செய்து அவருக்கு தேவையானதை முடிக்க வேண்டும் என்று விஷ்ணுவிற்கு நன்றாக தெரியும் என்று கூறினார். அர்ச்சனாவின் அப்பாவித்தனம் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு சிறப்பாக கைக்கொடுப்பதாக விஷ்ணு குறிப்பிட்டார்.
மணியின் Unique selling point: தொடர்ந்து பேசிய விசித்ரா, மாயா 200 சதவிகிதம் நிகழ்ச்சியில் என்டர்டெயின்மெண்ட் செய்தாக கூறிய நிலையில் தொடர்ந்து பேசிய மாயா, மணியின் Unique selling point ரவீனா என்று கூறினார். இதைக்கேட்ட நடிகர் கமல்ஹாசன், வாய்விட்டு சிரித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியின் மூன்றாவது பிரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த விசித்ரா மற்றும் தினேஷின் பிணக்கை சரிசெய்து வைத்தார் கமல். விசித்ரா மற்றும் தினேஷ் இடையில் என்னதான் பிரச்சினை என்று கமல் கேள்வி எழுப்பினார்.
விசித்ரா -தினேஷ் பஞ்சாயத்து: தொடர்ந்து அவர்கள் இருவரின் பஞ்சாயத்தை பேசி தீர்த்து வைத்தார். அவர் வேண்டுமென்றே அப்படி நடந்துக் கொள்வதாக விசித்ரா தினேஷ் குறித்து பேசியதையும் பார்க்க முடிந்தது. விசித்ரா மற்றும் தினேஷ் இருவரும் கைக்குலுக்கி நட்பு பாராட்ட கமல் காரணமாக அமைந்துள்ளார். இறுதி வாரத்தில் இதை தீர்த்துக் கொள்ளலாம் என்று கமல் குறிப்பிட்டார். தொடர்ந்து எப்போது சீரியசாக பஞ்சாயத்துக்களை தீர்த்து வைத்து வந்த கமல்ஹாசன், நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இன்றைய நிகழ்ச்சியில் கூலாக பிரச்சினைகளை தீர்த்து வைத்ததை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











