Bigg boss 7: யாருமே குறுக்கே பேசக்கூடாது.. அர்ச்சனா அழிச்சாட்டியம்.. தினேஷ் விடுவாரா?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்த நிலையில் தற்போது எண்ட் கார்ட் போடவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது. வரும் 14ம் தேதி இந்த நிகழ்ச்சியில் பைனல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக சேனல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிகழ்ச்சியில் 6 பைனல் போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அர்ச்சனா, தினேஷ், மணி, விஜய் வர்மா, மாயா, விஷ்ணு என இறுதிச்சுற்று போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இவர்களில் யார் டைட்டிலை வெற்றி கொள்வார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவருக்கு 130 கோடி ரூபாய் இந்த சீசனில் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த சீசனில் அவர் அதிகமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அவர் அதிகமான விமர்சனங்களை சந்தித்தார்.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதத்தில் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எலிமினேஷன், வைல்ட் கார்ட் என்ட்ரி என களைகட்டிய நிலையில் தற்போது நிகழ்ச்சி 6 போட்டியாளர்களுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சி 99வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் மீண்டும் சீண்டும் வகையில் பேசிக் கொண்டதை பார்க்க முடிந்தது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த நிகழ்ச்சியில் பைனலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகமான யூகங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டிலை வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. 2வது இடத்தை மாயா பிடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. நேற்றும் சனிக்கிழமையும் வாரயிறுதி எபிசோட்கள் ஒளிபரப்பாகின. இதில் கமல்ஹாசன் பங்கேற்று நிகழ்ச்சியை கூலாக வழி நடத்தினார். வழக்கமாக, போட்டியாளர்களின் பஞ்சாயத்தை மிகவும் கடினமாக எதிர்கொண்டுவந்த கமல்ஹாசன், நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் கூலாக செயல்பட்டார்.
99வது நாளில் என்ட்ரி: இந்நிலையில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் தான் இப்படிப்பட்ட ஆளா என்ற ஃபீல்ங்தான் தனக்கு இருந்ததாக அர்ச்சனா குறிப்பிடுகிறார். தொடர்ந்து தான் பேசும்போது யாருமே குறுக்கே பேசக்கூடாது என்று அவர் வம்படியாக கூறுகிறார். தினேஷ் குறுக்கே பேச துவங்க, அதை கேட்க முடியாது என்பதாக அர்ச்சனா செயல்படுகிறார். மற்றவர்கள் பேசியதற்கான விமர்சனமாக அர்ச்சனாவின் பேச்சு இருக்கக்கூடாது என்று தினேஷ் அர்ச்சனாவிடம் கூறுகிறார்.
டாஸ்க்கிலிருந்து வெளியேறிய அர்ச்சனா: தொடர்ந்து அவரது நிலைப்பாட்டை மட்டும் நிகழ்ச்சியில் பேசும்படி தினேஷ் கூறுகிறார். அப்படியென்றால் இந்த டாஸ்க்கை தன்னால் செய்ய முடியாது என்று கூறும் அர்ச்சனா, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக தற்போது வெளியாகியுள்ள 2வது பிரமோவில் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி வாரம் என்று கூறி நடிகர் கமல்ஹாசனே கடந்த இரு தினங்களில் கூலாக நடந்துக் கொண்ட நிலையில், நிகழ்ச்சியை விட்டு செல்லும்வரையில் தன்னுடைய அட்ராசிட்டியை போட்டியாளர்கள் குறிப்பாக அர்ச்சனா தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறைகூறிய போட்டியாளர்கள்: முன்னதாக வெளியான முதல் பிரமோவில் ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களின் கேம், மற்றவர்களை காட்டிலும் எப்படி சிறந்ததாக இருந்தது என்பதை கூற வேண்டும் என்று தினேஷ் இன்றைய தினத்திற்கான டாஸ்க்கை வாசித்தார். இதையடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கேம் குறித்து பேசியதை காட்டிலும் மற்றவர்களை குறைகூறியே தங்களது கேம் எப்படி அவர்களை காட்டிலும் உயர்ந்தது என்பதை குறிப்பிட்டதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











