Bigg boss 7 show: நீங்க பிரச்சினை பண்ண நினைச்சா.. தினேஷிடம் எகிறிய கேப்டன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்சிச்சி இன்றைய தினம் 29ம் நாளில் களமிறங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இதனிடையே போட்டியாளர்கள் யுகேந்திரன் மற்றும் வினுஷா இருவரும் எலிமினேட் ஆகியுள்ளனர்.
விஜய் டிவியின் பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை சிறப்பாக முடித்துள்ள நிலையில் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பவா செல்லதுரை நிகழ்ச்சியிலிருந்து தானே விரும்பி வெளியேறியுள்ளார். நேற்றைய தினம் யுகேந்திரன் மற்றும் வினுஷா என இரு போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: இதனிடையே நேற்றைய தினம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா உள்ளிட்ட 5 பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனவுடன் இவர்களை குறைவாக இம்ப்ரஸ் செய்ததாக கூறி கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுப்பினாலோ என்னவோ காலையிலேயே ஏழரையை கூட்டினார் தினேஷ். ஸ்மால் பாஸ் வீட்டின் முன்பு துணியை காயப்போட்டதாக கூறி கேள்வி எழுப்பினார்.
பிரச்சினையை துவக்கிய தினேஷ்: இதற்கு பதிலளித்த விசித்ரா, மண்டையில் எதுவுமில்லாததுபோல பேச வேண்டாம் என்று கூறுகிறார். தொடர்ந்து தினேஷிற்கு பதிலளித்த கேப்டன் பூர்ணிமா, தினேஷ் இதுபோல பேச வேண்டாம் என்றும் அந்த இடத்தில் துணி காயப் போடக்கூடாது என்று அவர் சொல்லக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பிரச்சினை பண்ண வேண்டும் என்று நினைத்து பேசினால் தானும் பிரச்சினை செய்வேன் என்றும் பூர்ணிமா காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
தொடர்களின் நிலைமை?: தற்போது கிழக்கு வாசல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும் நடிகர் தினேஷ் தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார். இதனால் இவரது சீரியல்களில் இவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் நுழையும்போதே தன்னுடைய வாழ்க்கை குறித்த இவரது பேச்சும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னுடைய வாழ்க்கையில் தான் 8 ஆண்டுகள் பின்தங்கியதாக உணர்வதாக இவர் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
பிரச்சினைகளுக்கு தயாரான தினேஷ்: இந்த நிகழ்ச்சியில் நுழைந்தவுடனேயே அடுத்தடுத்த பஞ்சாயத்துக்களுக்கு தாங்கள் தயார்தான் என்பதாக தினேஷ், அர்ச்சனா போன்றவர்களின் செயல்பாடுகள் காணப்பட்டன. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்பதாக கேப்டன் பூர்ணிமா, பிரதீப், விசித்ரா ஆகியோரும் செயல்பட்டனர். மொத்தத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











