Bigg boss 7: என்னது எல்லாருமே நாமினேஷன்ல இருக்காங்களா.. புத்தாண்டில் சுவாரசியம்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி எண்ட்கார்ட் போட உள்ளது. வழக்கம் போல இந்த ஏழாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோட்களான கடந்த இரு தினங்களில் அவர் சிறப்பான தொகுப்பை வழங்கினார்.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்து எலிமினேஷன்களையும் வைல்ட்கார்ட் என்ட்ரிகளையும் சந்தித்தது. இன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

பிக் பாஸ் 7: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தற்போது ஏழாவது சீசனில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. 90 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் எண்ட் கார்ட் போட உள்ளது. நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி உள்ளன. இன்றைய தினம் புத்தாண்டு தினத்தை ஒட்டி போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சியை களைகட்ட செய்தனர். ஆட்டம் பாட்டத்துடன் அறுசுவை உணவையும் சுவைத்து மகிழ்ந்தனர்.
இரண்டாவது பிரமோ: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் நாமினேஷனுக்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் நாக் அவுட் செய்யப்படுபவர்கள் நாமினேட் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் களத்தில் இறங்கினர். தொடர்ந்து அனைவரும் நாமினேஷன் செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.
வார இறுதி எபிசோட்கள்: கடந்த இரு தினங்களில் வார இறுதி எபிசோட்களில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் ரவீனா மற்றும் நிக்ஸனை எலிமினேட் செய்திருந்தார். ரவீனா மிக சிறப்பாக டிக்கெட் டு ஃபைனல் டாஸ்க்குகளை எதிர்கொண்ட நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் 7வது சீசன்: கடந்த 2017 முதல் ஆறு சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மிகப்பெரிய அளவுகளில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. விஜய் வர்மா, பிரதீப் உள்ளிட்டவர்கள் எலிமினேஷனும் சமூக வலைதளங்களில் அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சீசனும் நிறைவடைய உள்ளது.
நடிகர் கமல்ஹாசன்: நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த சீசனில் பல்வேறு விமர்சனங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அவர் பிரதீப்புக்கு எதிராக செயல்பட்டதாகவும் மாயாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படுவதாகவும் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு அவர் எந்த வகையிலும் விளக்கம் அளிக்காமல் நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











