புது வீடு அழகா இருக்கு.. பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி.. என்ன இப்படி ஒரு லுக்ல இருக்காரு!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனான இந்த சீசனை புதிய ஆங்கர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி சரவெடியான பிரமோக்களை வெளியிட்டு வருகிறது சேனல்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோணத்தில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகிவரும் நிலையில், விஜய் சேதுபதியின் புதிய லுக்குடன் தற்போது புதிய பிரமோ வெளியாகியுள்ளது. இதில் கோட் சூட்டுடன் கம்பீரமாக காணப்படுகிறார் விஜய் சேதுபதி. மீசை இல்லாமல் லேசான தாடியுடன் அவரின் புதிய லுக் காணப்படுகிறது.

television bigg boss tamil 8 show vijay sethupathi 8

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கும் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி நாளைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கவுள்ளது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், சினிமா கமிட்மெண்ட்களால் அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இதையடுதது நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி மாறியுள்ளார். அவரை வைத்து அடுத்தடுத்த பிரமோக்களை சேனல் தரப்பு வெளியிட்டு வருகிறது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷயத்தை கூறி வருகிறார் விஜய் சேதுபதி. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வாசகத்துடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டியுள்ளது.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புதிய பிரமோ: இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில், இதன் மேக்கிங் வீடியோவிற்கான டீசரும் வெளியானது. இந்நிலையில் நாளைய தினம் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவங்கவுள்ளது. இதற்கான சூட்டிங் நேற்றைய தினமே நடந்து முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் புதிய பிரமோவை சேனல் வெளியிட்டுள்ளது. இதில் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் நாளைய தினம் துவக்கவிழா களைகட்டவுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கதவை திறந்துக் கொண்டு பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் விஜய் சேதுபதி.

புது வீடு அழகா இருக்கு: புது வீடும் ரெடி, புது ஆளுங்களும் ரெடி மற்றும் புது ஹோஸ்ட் நானும் ரெடி என்று கூறும் விஜய் சேதுபதி, வீடு அழகாக இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து நாளை முதல் நிகழ்ச்சி துவங்கவுள்ளதாகவும் அவர் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு துவங்கவுள்ள இந்த துவக்கவிழாவில் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அதகளம் செய்யவுள்ள போட்டியாளர்களை அவர் எப்படி சமாளிப்பார் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும். இதையெல்லாம் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


நாளை துவங்கும் பிக்பாஸ் 8 ஷோ: இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக நாளை மாலை 4.30 மணிக்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற நிகழ்ச்சியையும் விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன்களின் போட்டியாளர்களிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ரசிகர்களை கேட்பதாக அமைந்துள்ளது. இதன் பிரமோக்களையும் அடுத்தடுத்து விஜய் டிவி தன்னுடைய சமூக வளைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து 100 நாட்கள் நடக்கவுள்ள இந்த ஷோவில் இந்த சீசனில் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X