Bigg boss 8: இந்த வார எலிமினேஷன் யார்.. அடுத்தடுத்த guessingகுடன் வெளிப்படுத்திய விஜய் சேதுபதி!
சென்னை: பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக விஜய் டிவியில் வெற்றி நடை போட்டு வருகிறது. எப்போதும் போல இந்த சீசனிலும் அடுத்தடுத்த சண்டைகள், மோதல்கள் அனைத்தையும் காண முடிந்தது. ஆயினும் போட்டியாளர்கள் 18 பேரும் ஏதோ பிக்னிக்கிற்கு வந்தது போல செயல்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆட்டத்தை அவர்கள் ஆடுவார்கள் என்று எதிர்பார்த்தால் கொத்தமல்லி கட்டு காணவில்லை என்று புகார் தெரிவித்துக் கொண்டு அவர்கள் திரிவதாக விஜய் சேதுபதி நேற்றைய தனது பேச்சில் அவர்களை பிரித்து மேய்ந்துள்ளார். இதனிடையே இன்றைய தினம் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நபர் யார் என்பது குறித்து இன்றிரவு தெரியவரும்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி அடுத்தடுத்து ட்விஸ்ட்களுடன் நடைபோட்டு வருகிறது. நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து கடந்த வாரத்தில் போட்டியாளர்களின் செயல்பாடுகளை வெளுத்து வாங்கினார். இந்நிலையில் இன்றைய தினமும் அவர் அடுத்தடுத்து போட்டியாளர்களை மற்றும் அவர்களது செயல்பாடுகளை ரிவ்யூ செய்யவுள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் இந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான எலிமினேஷன் யார் என்பது குறித்து தெரியவரும். முன்னதாக நிகழ்ச்சி துவங்கப்பட்டு முதல் நாளிலேயே சாச்சனா நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டிருந்தார்.
முதல் வார எவிக்ஷன்: ஆனால் சாச்சனாவிற்கு மக்களின் ஆதரவு பெருகிய நிலையில் மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டில் இணைந்துள்ளார். தற்போது துவக்கத்தில் இருந்தது போலவே 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் முதல் எவிக்ஷன் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஆறு நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் ரவீந்திரன், ரஞ்சித், சௌந்தர்யா, ஜாக்குலின் என அடுத்தடுத்த நபர்களில் யார் இன்றைய தினம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. தயாரிப்பாளர் ரவீந்தர்தான் இந்த முதல் எவிக்ஷன் என்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
3வது பிரமோ: ஆனாலும் விஜய் சேதுபதி அவருக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசியுள்ள நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து எவிக்டாக வாய்ப்புகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான மூன்றாவது பிரமோ வெளியாகியுள்ளது. அதில் ஜாக்குலின், ரஞ்சித் மற்றும் ரவீந்தர் 3 பேரில் ஒருவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவுள்ளதாக விஜய் சேதுபதி கூறுகிறார். இதனால் சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் சேஃப் சோனிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இந்த பிரமோவில் பேசியுள்ள ஜாக்குலின் ரவீந்தர் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகமாட்டார் என்று தான் கருதுவதாக கூறியுள்ளார்.
எலிமினேஷனை அறிவிக்கும் விஜய் சேதுபதி: தொடர்ந்து பேசிய தீபக், ஜாக்குலின்தான் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆவார் என்று தான் நினைப்பதாக கூறுகிறார். இதையடுத்து பேசிய விஜய் சேதுபதி, இதனிடையே மக்களின் தீர்ப்பாக இந்த எலிமினேஷன் நடக்கவுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே அந்த நம்பரை முதலில் காட்டலாம் என்றும் கூறி தான் கையில் வைத்திருக்கும் கார்டை ஆடியன்ஸ் பக்கம் திருப்புவதாகவும் அவர்கள் அதிர்ச்சி அடைவதாகவும் எந்த பிரமோவில் காணப்படுகிறது. மக்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் யார் அந்த எலிமினேஷன் நபர் என்பதாக தற்போது கேள்வி எழுந்துள்ளது இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள இன்றைய தினத்தின் எபிசோடில் இதற்கான விடை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











