விஜய் சேதுபதிக்கு ரசிகர்களோட எதிர்பார்ப்பு புரிஞ்சு போச்சாம்.. பிக்பாஸ் 8 ஷோவின் 2வது பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில மணிநேரங்களில் துவங்கவுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் இன்று மாலை 6 மணியளவில் துவங்கவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. வழக்கமாக நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து அடுத்தடுத்த பிரமோக்களை சேனல் வெளியிடும். அதையொட்டி தற்போது அடுத்தடுத்து இரு பிரமோக்களை வெளியிட்டுள்ளது.

television vijay tv bigg boss tamil 8 show 8

நடிகர் விஜய் சேதுபதி:நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ள விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியளவில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்களை சேனல் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியிடப்பட்ட முதல் பிரமோவில் நாட்டுப்புற கலைஞர்கள் சூழ, ரசிகர்களிடையே விஜய் சேதுபதி கைக்குலுக்குவதாக காணப்பட்டது. தொடர்ந்து வீடு ரெடி, போட்டியாளர்கள் ரெடி மற்றும் ஹோஸ்ட் தானும் ரெடி என்றும் அவர் கூறியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோவும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 ஷோ: இதில் பிரம்மாண்ட மேடைக்கு விஜய் சேதுபதி கம்பீரமாக அடியெடுத்து வருவதாக காணப்பட்டது. தொடர்ந்து தன்னை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்களை தன்னுடைய ட்ரேட்மார்க் சிரிப்புடன் கையசைத்து அவர் உற்சாகப்படுத்துகிறார். தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு புரிந்துவிட்டதாகவும் மேடை ரெடி, வீடு ரெடி, போட்டியாளர்களும் ரெடி என்று கூறும் விஜய் சேதுபதி, புதிய கோணத்தில், புதிய வியூகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பிரமோவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு ஹோஸ்டிங் இயல்பாக வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரம்மாண்ட துவக்கவிழா: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்று மாலை 6 மணியளவில் துவங்கவுள்ள நிலையில், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டையும் தன்னுடைய புதிய லுக்கையும் நேற்றைய தினம் வெளியான பிரமோவில் காட்டியிருந்தார் விஜய் சேதுபதி. மீசை, தாடியில்லாமல் இருக்கும் அவரது இந்த புது லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கோட் சூட்டில் மிகவும் சிறப்பாக காணப்படுகிறார். கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்ற நடிகர் கமல்ஹாசன், தற்போதைய சீசனில் இருந்து விலகியுள்ளார். அதிகமான படங்களின் கமிட்மெண்ட்தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்: ஆனாலும் கடந்த சீசனில் பல சர்ச்சைக்கருத்துக்களுக்கு இந்த நிகழ்ச்சியும் நடிகர் கமல்ஹாசனும் உள்ளான நிலையில், இதுவே அவரது விலகலுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ள விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும். இந்த துவக்கவிழாவிற்கான சூட்டிங் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று மாலை அதன் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X