காரிலிருந்து மாஸாக இறங்கிவரும் விஜய் சேதுபதி.. பிக்பாஸ் தமிழ் 8 ஷோவின் மேக்கிங் வீடியோ டீசர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 அடுத்த வாரம் அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் புதிய ஆங்கராக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக 7 சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் நடிகர் கமல்ஹாசன்.
இதனிடையே தனக்கு அதிகமாக படங்களின் கமிட்மெண்ட் இருப்பதாக கூறி, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்த 8வது சீசனில் விஜய் சேதுபதி ஆங்கராக களமிறங்கியுள்ளார். இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி அடுத்த வாரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. கடந்த ஏழு சீசன்களை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 8வது சீசன் துவங்கவுள்ளது. இந்த சீசனில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பிரோமோவுடன் நிகழ்ச்சியின் புதிய ஆங்கராக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. கடந்த ஏழு சீசனங்களில் இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக செயல்பட்ட கமல்ஹாசன், அதிகமான படங்களின் கமிட்மெண்ட் உள்ளதாக கூறி இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி உள்ளார்.
ஆங்கர் விஜய் சேதுபதி: ஆனாலும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிசியில் அவர் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்தது தான் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகியதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே புதிய ஆங்கர் விஜய் சேதுபதியையொட்டி அடுத்தடுத்த ப்ரோமோக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நிகழ்ச்சியின் மேக்கிங் வீடியோவிற்கான டீசரை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்த டீசரில் காரில் இருந்து மாஸாக இறங்கி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து அடுத்தடுத்து அவர் ஷூட்டிங்கில் பங்கேற்ற நிகழ்வுகளையும் அவர் சோபாவில் ஹாயாக உட்கார்ந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் இந்த டீசரில் பார்க்க முடிகிறது.
மேக்கிங் வீடியோ டீசர்: மொத்தத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இந்த மேக்கிங் வீடியோ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், முழு வீடியோவை விரைவில் வெளியிட உள்ளதாக தற்போது பிக் பாஸ் டீம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதியின் மாஸையும் சேட்டைகளையும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்க ரசிகர்களும் மிகவும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காகவும் அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரசிகர்கள் வெயிட்டிங்: இந்த நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து இன்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் வெளியிடாமல் உள்ளனனர். இது குறித்தும் இன்னும் சில தினங்களில் முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதில் பிரபல காமெடி நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனும் வழக்கம்போல களைகட்டும என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளதையொட்டி இன்றைய தினம் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி எண்ட் கார்ட் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











