எதுவானாலும் நான் ரெடி.. பிக்பாஸ் 8 பிரமோவில் டெரராக பேசிய விஜய் சேதுபதி.. நாங்களும் ரெடி தானுங்கோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 6ம் தேதி முதல் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. இதற்காக பிக் பாஸ் வீடும் தயாராகியுள்ள சூழலில் நிகழ்ச்சியின் புதிய ஆங்கராக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதியும் ஜரூராகவே தயாராகி வருகிறார்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் விஜய் டிவியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு வரும் சூழலில் இதன் உருவாக்க வீடியோவின் டீசரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன் முழு வீடியோவும் விரைவில் வெளியாகும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

bigg boss tamil 8 show vijay sethupathi 8

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் ஏராளமான ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய 8வது சீசனை அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது. வரும் அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமான துவக்க விழா உடன் பிக் பாஸ் சீசன் 8 துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு சீசன்களில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மாஸான ஆங்கராக இருந்த உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் புதிய ஆங்கராக இணைந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும், எப்படி ரசிகர்களை கவர்ந்து கமலுக்கு சரியான டஃப்பாக விஜய் சேதுபதி இருப்பாரா, அவரது இயல்பான நடவடிக்கைகளுக்கு இந்த நிகழ்ச்சி கை கொடுக்குமா என்று ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன.

ஆங்கர் விஜய் சேதுபதி: ஆயினும் விஜய் சேதுபதி கண்டிப்பாக பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை சிறப்பாக அடுத்தடுத்து நகர்த்தி செல்வார் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு இந்த பிரமோக்கள் வெளியாகி வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியின் பிரமோ சூட்டிங் வீடியோவின் டீசர் வெளியிடப்பட்டது. இனிமேல் தான் மெயின் பிக்சர் என்று நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இன்றைய தினம் மீண்டும் நிகழ்ச்சியின் அடுத்த பிரமோ வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் புதிய ப்ரமோ: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எது இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று விஜய் சேதுபதி இந்த ப்ரொமோவில் கூறியுள்ளார். புது வீடு, புது மனிதர்கள், சண்டை போடுவோமா என்று தெரியாது என்று கூறியுள்ள அவர், ஆனால் கண்டிப்பாக சமாதானமாக இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் எதுவாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் மிகவும் கான்ஃபிடன்டாக கூறியுள்ள நிலையில் இந்த சீசனில் எது நடந்தாலும் பார்ப்பதற்கு தாங்களும் தயார் தான் என்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பிரமோக்களை பார்க்கும் ரசிகர்கள், நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆங்கர் என்ற பொசிஷன் கண்டிப்பாக சிறப்பாக பொருந்துவதாக தற்போது உச்சி முகர்ந்து வருகின்றனர்.

எப்படி இருக்கும் விஜய் சேதுபதியின் தொகுப்பு?: இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் வழக்கம் போல போட்டியாளர்களின் அறிமுகம் இருக்கும் நிலையில் நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார், அவர்கள் எப்படி நிகழ்ச்சிக்கு கலகலப்பையும் பரபரப்பையும் சண்டை சச்சரவையும் கொடுப்பார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த நிகழ்ச்சியை எதிர்கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை மேலும் நீட்டிக்கும் வகையில் விஜய் டிவியும் அடுத்தடுத்த ப்ரோமோக்களை களமிறக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X