BB8 eliminatiion: பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய நபர்.. அப்ப 2வது எலினேஷன்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 8வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த 7 சீசன்களில் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக கமல்ஹாசன் சிறப்பாக செய்லபட்ட நிலையில் தற்போது 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கி நடந்துவந்த நிலையில் இடையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 6 போட்டியாளர்கள் நுழைந்தனர். அடுத்தடுத்து போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

television bigg boss tamil 8 vijay tv 8

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 8 ஆண்டுகளாக நடைபோட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், தற்போது 8வது சீசனில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் பிரபல நடிகர் விஜய் சேதுபதி. அவரது ஹோஸ்ட்டிங்கில் வாரயிறுதி எபிசோட்கள் சிறப்பாக களைகட்டி வருகின்றன. சில கலவையான விமர்சனங்களையும் அவர் பெறத் தவறவில்லை.

அடுத்தடுத்த எலிமினேஷன்: 18 போட்டியாளர்கள் மற்றும் 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்துவந்த நிலையில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளனர். விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக டபுள் எவிக்ஷன் காணப்பட்டது. இந்நிலையில் இந்த வாரமும் நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வாரம் தீபக், ரயான் உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் இருவருமே அதிகமான புள்ளிகள் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பியுள்ளனர்.

இந்த வார எலிமினேஷன்: இதையடுத்து இந்த வாரம் மஞ்சரி, பவித்ரா, அருண் ஆகியோரில் இருவர் எலிமினெட் ஆவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இந்த வாரம் எலிமினேஷனாக ராணவ் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் நுழைந்த நிலையில், ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்ற நிலையிலும் இந்த வாரம் இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் அடுத்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறைவான புள்ளிகள் பெற்றுள்ள மஞ்சரிதான் வெளியேறியுள்ளாரா என்பதை விரைவில் தெரிந்துக் கொள்ளலாம்.

அடுத்தடுத்த பிரமோக்கள்: இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள பிரமோக்களில் ரயானுக்குத்தான் டிக்கெட் டூ பினாலே கிடைக்கக்கூடாது என்பதை அதிகமான போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மஞ்சரியும் ரயானும் அந்த லிஸ்ட்டில் காணப்படுகின்றனர். ஆனாலும் ரயான்தான் டிக்கெட் டூ பினாலேவில் வெற்றி பெற்றுள்ளார். இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் முத்துவை விஜய் சேதுபதி வறுத்தெடுத்ததையும் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X