Bigg boss 8: என்னது இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா.. சிக்குனது யாருன்னு தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த ஏழு சீசன்களை நிறைவு செய்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் வெற்றி நடைபோட்டு வருகிறது. கடந்த ஏழு சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் ஹோஸ்டாக அமைந்த நிலையில் தற்போது இந்த 8வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்டாக அடுத்தடுத்து சம்பவங்களை செய்து வருகிறார்.

கமல்ஹாசனுக்கு கிடைத்தது போலவே விஜய் சேதுபதிக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைப்பதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில் தற்போது நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரு வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் டபுள் எவிக்சன் இருந்த நிலையில் இந்த வாரமும் இரண்டு பேர் எலிமினேட் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

television bigg boss tamil 8 vijay tv 8

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் சிறப்பான வகையில் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 8வது சீசனும் கடந்த அக்டோபர் 6ம் தேதி துவங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் இடையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஆறு போட்டியாளர்களும் இணைந்து கொண்டனர், இந்நிலையில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் மட்டுமே காணப்படுகின்றனர்,

இறுதிச்சுற்றில் ரயான்: இவர்களில் டிக்கெட் டூ பினாலேவில் வெற்றி பெற்று ரயான் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதில் போட்டியிட்ட முத்துக்குமரன் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் சில புள்ளிகளில் தன்னுடைய வாய்ப்பை தவற விட்டுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து சிறப்பான டாஸ்க்குகளுடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வார எலிமினேஷனுக்கு ரயான், தீபக், ஜாக்குலின், பவித்ரா, அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தீபக் வாக்குகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்ற ரயான் உள்ளார்.

இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்: கடந்த இரு வாரங்களை போலவே இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டுள்ள நிலையில், குறைவான வாக்குகளை பெற்றுள்ள மஞ்சரி முதலில் வெளியேற்றப்டுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து பவித்ரா அல்லது அருண் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று ஜெப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறிய நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் வாரங்களில் அடுத்தடுத்து பைனல் போட்டிக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் குறித்து தெரியவரும்.

விரைவில் எண்ட் கார்ட்: கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்ற நிலையில் சில கலவையான விமர்சனங்களையும் கடந்த சீசனில் அவர் பெற்றிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை கற்பதற்காக அவர் சென்றுள்ள நிலையில், தன்னுடைய தொடர் கமிட்மென்ட்கள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விளங்கினர். இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் ஹோஸ்ட்டாக கலந்து கொண்டு அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இவருக்கும் கலமையான விமர்சனங்கள் கிடைப்பதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி எண்ட் கார்டு போடவுள்ள நிலையில் நிகழ்ச்சி மேலும் கலைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X