பிக்பாஸ் 8: Realஆ.. Fakeஆ.. சக போட்டியாளர்களுக்கு முகத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய போட்டியாளர்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி மற்றும் முதன்மை நிகழ்ச்சியாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாட்களை கவர்ந்து சுவாரஸ்யங்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல் 24 மணிநேரத்திலேயே எவிக்ஷன் மேற்கொள்ளப்பட்டு நடிகை சாச்சனா வெளியேறினார். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவரது வெளியேற்றம் இருந்தது. அவருக்கு மீண்டும் நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்பட்ட நிலையில் அவர் தற்போது மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது பிக்பாஸ் ஷோ.க்டந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக கம்பீரமான குரலுடனும் நடவடிக்கைகளுடனும் வலம்வந்த கமல்ஹாசன் இந்த சீசனில் இல்லை. அவருக்கு மாற்றாக நடிகர் விஜய் சேதுபதியை பிக்பாஸ் நிகழ்ச்சி களமிறக்கியுள்ளது. அவரது புதிய ஹோஸ்ட்டிங் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை நாளைய வாரயிறுதி நிகழ்ச்சியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த வாரத்தில் துவக்க விழா நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டில் அனுப்பி வைத்திருந்தார் விஜய் சேதுபதி.
ஆங்கர் விஜய் சேதுபதி: மிகுந்த சுவாரஸ்யங்களுடன் போட்டியாளர்களின் நிறைகுறைகளை வெளிப்படுத்தி இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் பேசியிருந்தார் விஜய் சேதுபதி. அவர்களுடன் இணக்கமாக நடந்துக் கொண்ட அவர், தான் இதேபோல இருப்பேன் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்றும் ட்விஸ்ட் வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த நிகழ்ச்சி சிறப்பான தருணங்களுடன் விறுவிறுப்பான நடைபோட்டு வருகிறது. ஆண்கள், பெண்களை இந்த நிகழ்ச்சியில் தனித்தனியாக தங்க வைத்ததுடன் அவர்களுக்கான அடுத்தடுத்த டாஸ்க்குகளையும் சுவாரஸ்யத்துடன் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் கொடுத்து வருகிறார்.
ஜாக்குலின் -சுனிதா புகைச்சல்: தினந்தோறும் அடிதடிக்கான முன்னோட்டங்கள், வாக்குவாதங்கள், காசிப்கள், முரண்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் நடந்துக் கொள்கின்றனர். ஜாக்குலின் மற்றும் சுனிதா இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. இதை அவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே இன்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்கான 2வது பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியின் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக, 24 மணிநேரத்தில் எவிக்ட்டான சாச்சனா தற்போது மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளார். இது போட்டியாளர்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இரண்டாவது பிரமோ: இந்த வாரமும் எவிக்ஷன் இருக்கும் நிலையில் அதற்கான நாமினேஷன்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த இரண்டாவது பிரமோவில், இந்த நிகழ்ச்சியில் ஃபேக்காக நடித்துக் கொண்டிருப்பவர்கள் குறித்து சக போட்டியாளர்கள் பேசுவதாக காணப்பட்டது. தான் இவ்வாறு உணர்ந்த நபர்களுக்கு Fake என்ற ஸ்டிக்கரையும் அவர்கள் முகத்தில் போட்டியாளர்கள் ஒட்டுகின்றனர். அதற்கான காரணங்களையும் அடுக்குகின்றனர். இவ்வாறு தீபக், ரஞ்சித் மற்றும் ரவீந்தர் ஆகியோர் அதிகமான ஃபேக் ஸ்டிக்கர்களை பெறுவதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது. தீபக் ஒருவர் அனைவரது ஆட்டத்தையும் சேர்ந்து விளையாடுவதாக தோன்றுவதாகவும் போட்டியாளர்கள் கூறுகின்றனர்.
ரியலா ஃபேக்கா?: இதனிடையே Realஆக இருப்பவர்கள் குறித்தும் போட்டியாளர்கள் Sticker ஒட்டுகின்றனர். மொத்தத்தில் போட்டியாளர்கள் முகங்கள் Real மற்றும் Fake ஸ்டிக்கர்களாக காணப்பட்டன. இந்த பிரமோக்கள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டினாலும் இதன் கமெண்ட்களில் விஜய் சேதுபதியின் வரவுக்காக ரசிகர்கள் காத்திருப்பதையே அதிகமாக காட்டுகின்றன. நாளை அவரது ரிவ்யூ எப்படி இருக்கும் என்பதையே அவர்கள் எதிர்நோக்குவதாக குறிப்பிட்,டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











