BB8: அது நம்பளோட யூனிட்டி மண்ணாங்கட்டின்னு சொன்னாங்க.. விஜய் சேதுபதியுடன் சாச்சனாவை விளாசிய சுனிதா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் களமிறங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த களேபரங்களை முதல் வாரத்திலேயே பார்க்க முடிந்தது. வாரயிறுதி எபிசோடான நேற்றைய தினம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி போட்டியாளர்களை அடுத்தடுத்த விஷயங்களில் வறுத்தெடுத்ததை பார்க்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த 6ம் தேதி நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கியுள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு பதிலாக புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி துவக்கவிழாவில் பங்கேற்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து முத்தம் கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்ததுடன் நேற்றைய தினம் முதல் ரிவ்யூவை மேற்கொண்டார்.

bigg boss tamil 8 vijay sethupathi 8

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரத்தில் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் துவக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பாக வரவேற்று, சிலருக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய ஸ்டைலில் அதகளம் செய்திருந்தார் புதிதாக ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி. கடந்த 7 சீசன்களில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் வழிநடத்திய நிலையில் தற்போது அந்த இடத்திற்கு விஜய் சேதுபதி வந்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விளாசிய விஜய் சேதுபதி: இதையடுத்து நேற்றைய தினம் வாரயிறுதி எபிசோடில் பங்கேற்ற விஜய் சேதுபதி, போட்டியாளர்களை வறுத்தெடுத்ததை பார்க்க முடிந்தது. முதல் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் செய்த விஷயங்களை எல்லாம் சுட்டிக்காட்டி அவர் ஆவேசமாக பேசியதும் இருந்தது. தொடர்ந்து அனைவரும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தொடர்ந்து பெட்டிற்காகவும் கொத்தமல்லி கறிவேப்பிலைக்காகவும் சண்டையிட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டு அனைவரும் பிக்னிக் வந்ததைபோல செயல்படுவதாக கோபத்தை வெளிப்படுத்தினார்.

சாச்சனாவிடம் கேள்வி: ரவீந்தர் -ரஞ்சித் விவகாரத்தையும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய நிலையில், இன்றைய தினத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல்நாளிலேயே வெளியேறி பின்பு மீண்டும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சாச்சனாவை அவர் அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார். பெண்கள் அணியில் இருக்கும் 3 வீக்கான போட்டியாளர்கள் குறித்து பெண்கள் அணியில் கூறாமல் ஏன் ரவீந்தரிடம் சாச்சனா கூறினார் என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சாச்சனா முழித்ததை பார்க்க முடிந்தது.

கொதித்த சுனிதா: இதனிடையே இந்த விஷயத்தில் சாச்சனா குறிப்பிட்ட அந்த 3 வீக்கான போட்டியாளர்கள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப, ரவீந்தர் அவர்களை சுட்டிக் காட்டினார். அன்ஷிதா, சௌந்தர்யா மற்றும் சுனிதாவை அவர் பட்டியலிட, இதைக் கேட்ட சுனிதா கொதித்தெழுந்ததை பார்க்க முடிந்தது. பெண்களுக்குள் யூனிட்டி, மண்ணாங்கட்டி என்று கூறிவிட்டு, பெண்களில் வீக் போட்டியாளர்கள் குறித்த விஷயத்தை ரவீந்தரிடம் கூறாமல், இங்கே கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை இந்தப் பிரமோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X