Bigg boss 8: கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுங்க.. தர்ஷா குப்தாவின் மூக்கை உடைத்த விஜய் சேதுபதி
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 7 சீசன்களை வெற்றிகரமான நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்த நிலையில் இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக மாஸ் காட்டிவருகிறார்.
இந்தநிகழ்ச்சியின் இன்றைய தினமும் வாரயிறுதி எபிசோடில் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளார். இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. சென்ற வாரத்தை காட்டிலும் இந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடுகள் சிறப்பாகியுள்ளதாக விஜய் சேதுபதி இன்றைய தினம் பிரமோவில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தற்போது நிகழ்ச்சியின் 3வது பிரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் ஹோஸ்ட்டாக இருந்து சிறப்பாக செயல்பட்ட நிலையில், அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்ட்டால் அவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ளார். கமல்ஹாசனுக்கு இணையாக இந்த நிகழ்ச்சியை இவர் சிறப்பாக கொண்டு செல்வாரா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையேயும் இருந்து வந்தது. ஆனால் தற்போது கமல்ஹாசனா -விஜய் சேதுபதியா என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விஜய் சேதுபதியை ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.
ஹோஸ்ட் விஜய் சேதுபதி: நிகழ்ச்சியின் துவக்க விழாவிலேயே இவரது செயல்பாடுகள் சேனலின் டிஆர்பியை அதிகமாக ஏற்றி வைத்திருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். கடந்த வாரயிறுதி எபிசோடில் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். பிக்னிக் வந்தது போல அவர்களின் செயல்பாடுகள் இருப்பதாக விளாசினார். மேலும் தயாரிப்பாளர் ரவீந்தரையும் சிறப்பாக பேசி எலிமினேட் செய்தார். இதனிடையே இந்த வாரயிறுதி எபிசோடில் இன்றும் நாளையும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதல் பிரமோவில் பேசிய விஜய் சேதுபதி, கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது போட்டியாளர்கள் தங்களது ஆட்டத்தை ஆட துவங்கியுள்ளதாகவும் இன்னும் அதிக தூரம் போக வேண்டும என்று கூறுவதாகவும் அமைந்திருந்தது. இதனிடையே இரண்டாவது பிரமோவில் அன்ஷிதா மற்றும் சாச்சனா இடையிலான சண்டை குறித்து அவர் விசாரித்ததை பார்க்க முடிந்தது. சாப்பிட்டிற்காக எத்தனை முறை கேட்பது என்று அழுகையினூடே சாச்சனா கேள்வி எழுப்பியதையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது.
விஜய் சேதுபதி கேள்வி: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள 3வது பிரமோவில் தர்ஷா குப்தாவிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். குழாயடி சண்டைநடக்கும்போது அவருக்கு முட்டை தேவையா என்று தர்ஷாவிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப, அதற்கு அவர் மழுப்பதாக பதிலளிக்க முயல்கிறார். இதையடுத்து அவருக்கு ஃபேவரான பதிலை கூறாமல் கேட்ட கேள்விக்கான பதிலை அளிக்குமாறு அவரது மூக்கை உடைக்கும் வகையில் விஜய் சேதுபதி ஹார்ஷாக அதே சமயம கண்டிப்பாக பேசுகிறார்.
திணறிய தர்ஷா குப்தா: இதையடுத்து, அன்ஷிதா தன்னிடம் பாகுபாடு காட்டுவதாகவும் சாப்பாட்டு விஷயத்தில் சுனிதாவை தனியாக கவனிப்பதாகவும் தர்ஷா குப்தா குற்றம் சாட்ட, இடையில் பேசும் சுனிதா, தர்ஷா பச்சையாக பொய் சொல்வதாகவும் இந்த வீட்டிலேயே தான் தான் கம்மியாக சாப்பிடுவதாகவும் விளக்கம் அளிக்கிறார். இதையடுத்து தர்ஷாவிடம் திரும்பிய விஜய் சேதுபதி, இப்போது அவர் என்ன கூறுகிறார் என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் தர்ஷா திணறுவதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











