பிக்பாஸ் 8: சண்டை போட தூண்டுகிறாரா ஜாக்குலின்.. சுனிதா என்ன இப்படி சொல்றாங்க!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஆறாம் தேதி சிறப்பான துவக்க விழா கொண்டாட்டத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்டாக விஜய் சேதுபதி இணைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டி வருகிறது.

நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செயல்பட்டுவரும் சூழலில் அவர்களுக்கு அடுத்தடுத்த டாஸ்க்குகளை பிக் பாஸ் கொடுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் புதிய நிகழ்வாக முதல் 24 மணி நேரத்திலேயே நிகழ்ச்சியில் எவிக்ஷன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனும் நடத்தப்பட்டுள்ளது.

bigg boss tamil 8 show vijay tv

பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த 6ம் தேதியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தனது 8வது சீசனை துவங்கியுள்ளது. இந்த சீசனில் புதிய வரவாக ஹோஸ்ட் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இது இந்த நிகழ்ச்சிக்கான அட்ராக்ஷனாக பார்க்கப்படும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்வதிலேயே விஜய் சேதுபதிக்கு நேரம் போனது. இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் விஜய் சேதுபதியின் பேச்சை கேட்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சாச்சனா எவிக்ஷன்: நிகழ்ச்சி துவக்கத்திலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதையும் சிலர் பிராங்க் செய்கிறேன் என்று அடிதடி சண்டை வரையில் போனதையும் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி துவங்கிய 24 மணி நேரத்தில் சாச்சனா எவிக்ட் ஆன நிலையில் அவருக்கு மீண்டும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவை குறித்து எல்லாம் இந்த வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினத்திற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜாக்குலின் -சுனிதா மோதல்: ஜாக்குலின் மற்றும் சுனிதாவிற்கு இடையில் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் அன்ஷிதாவிடம் பேசிய சுனிதா, ஜாக்குலின் தொடர்ந்து சண்டை போடும் வகையிலேயே பேசுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த அன்ஷிதா, இதுபோன்ற சண்டைகளை போட்டால் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை கவர முடியும் என்று ஜாக்குலின் நினைக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அடுத்தவர்களை சண்டை போட தூண்டும் வகையில் ஜாக்குலினின் செயல்பாடு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய பிரமோ: இதுபோன்று நடந்துக் கொள்வது ஜாக்குலினின் நேச்சர் என்றும் சுனிதா கூறுகிறார். தொடர்ந்து இது அவருக்கு எந்த வகையிலும் உதவாது என்றும் அவர் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. ஏற்கனவே ஜாக்குலின் மற்றும் சுனிதா இடையில் அடிக்கடி சண்டை மூளும் நிலையில் தற்போது சுனிதாவுடன் அன்ஷிதாவும் இணைந்துள்ளார். இதனால் சண்டை இன்னும் பலமாக நடக்குமா என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம். தொடர்ந்து தான் டெரராகவும் நடந்துக் கொள்வேன் என்று துவக்க விழாவிலேயே ஹிண்ட்கொடுத்துவிட்டு சென்றார் விஜய் சேதுபதி. அவரது நடவடிக்கையை பார்க்க இன்னும் இரு தினங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X