BB8: உள்ளே வந்தீங்கன்னா நடக்கறதே வேற.. போர்க்கொடி தூக்கிய அர்னவ்.. என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் அதிகமான கவனத்தை பெற்று வருகிறது. கடந்த 7 சீசன்களில் கமல்ஹாசன் இந்த ஷோவை வழங்கிவந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக மாறியுள்ளார்.

புது ஹோஸ்ட்டான விஜய் சேதுபதியின் வரவு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பையும் அட்ராக்ஷனையும் கொடுத்துள்ளது. அவரும் இந்த எதர்பார்ப்பை சிறப்பாகவே பூர்த்தி செய்துள்ளார். கடந்த வாரயிறுதி நாட்களில் இவர் சுழற்றிய சாட்டை, தற்போது சிறப்பாகவே கைக்கொடுத்துள்ளது. போட்டியாளர்கள் சிறப்பாகவே போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.

bigg boss tamil 8 vijay sethupathi 8

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி சேனலின் முதலிடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது. கடந்த 7 சீசன்களாகவே இந்த நிகழ்ச்சி சிறப்பாகவே அமைந்தது. கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களையும் ஹோஸ்ட் செய்த நிலையில், அவரது பிரசென்ஸ் இந்த நிகழ்ச்சியை பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களிடையே கொண்டு சென்றது. ஆயினும் மூத்த நடிகர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவரிடம் நெருங்க போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் தயக்கமாகவே செயல்பட்டனர். இதனிடையே தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகினார்.

ஹோஸ்ட் விஜய் சேதுபதி: இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய 8வது சீசனின் புதிய ஹோஸ்ட்டாக விஜய் சேதுபதி களமிறங்கினார். இதையடுத்து கமல்ஹாசனை போல விஜய் சேதுபதியால் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பலரும் இதற்கு பாசிபள் இல்லை என்றே விமர்சித்து வந்தனர். விஜய் சேதுபதி தோழமையாக பழகுபவர் என்பதால் அவரை போட்டியாளர்கள் எளிதாக கடந்து விடுவார்கள் என்றே விமர்சிக்கப்பட்டது. இதை துவக்க விழா நாளில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் சகஜமாக பேசியும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் நிரூபித்தார். ஆனாலும் இதேபோல இருப்பேன் என்று நினைக்காதீர்கள் என்று தன்னுடைய பேச்சில் ட்விஸ்ட்டும் வைத்திருந்தார்.

நெருப்பை பற்றவைத்த விஜய் சேதுபதி: இந்நிலையில் கடந்த வாரயிறுதி எபிசோடில் பங்கேற்ற விஜய் சேதுபதியில் செயல்பாடுகள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளன. தனி கம்பீரத்துடன் போட்டியாளர்களை அவர் எதிர்கொண்ட விதம் நிகழ்ச்சிக்கு தனியாக டிஆர்பியை ஏற்றிக் கொடுத்துள்ளது. கமல்ஹாசனா, விஜய் சேதுபதியா யாருடைய ஹோஸ்ட்டிங் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெஸ்ட் என்று சமூக வலைதளங்களில் பட்டிமன்றமே நடத்தப்பட்டு வருகிறது. முதல் வாரத்திலேயே தன்னுடைய சாட்டையை சுற்றிய விஜய் சேதுபதி பிக்னிக் வந்தது போன்ற அவர்களது செயல்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் அடியில் நெருப்பை வைத்துக் கொண்டது போன்று போட்டியாளர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

போர்க்கொடி தூக்கிய அர்னவ்: இதையடுத்து நிகழ்ச்சியில் அடுத்தடுத்த நாமினேஷன், தலைமை என அடுத்தடுத்த டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் அதிரடி காட்டி வருகின்றனர். இன்றைய தினம் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்களிலும் இதை பார்க்க முடிந்தது. பெண்கள் டீமிலிருந்து தர்ஷா குப்தாவும் ஆண்கள் டீமிலிருந்து தீபக்கும் அணி மாறியுள்ளனர். இதனிடையே இன்றைய தினத்திற்கான 3வது பிரமோவில் அனுமதி பெறாமல் ஆண்கள் டீமிற்குள் நுழைந்ததாக ஜாக்குலினை அர்னவ் உள்ளிட்டவர்கள் வறுத்தெடுத்ததை பார்க்க முடிந்தது. கிட்சன் இன்சார்ஜ் இல்லாததால் தான் உள்ளே வந்ததாக அவர் சிறிது காட்டமாகவே விளக்கம் கொடுக்க, இதையடுத்து அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்தால் நடப்பது வேறு என்று நாட்டாமை போல அர்னவ் கைதூக்கி பேசியதையும் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X