BB tamil 8: நீ யாருடா சொல்றதுக்கு வாயமூடு.. எகிறிய சவுந்தர்யா.. பிக் பாஸ் வீட்டில் பயங்கர சண்டை!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 8வது சீசனில் அதிரடியாக களமிறங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 6ம் தேதி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. கடந்த 7 சீசன்களில் ஹோஸ்ட்டாக இருந்த கமல்ஹாசன் விலகிக்கொள்ள விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ளார்.
தற்போது இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து அதிரடியாக நடந்து வருகிறது. அந்த வகையில் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதியும் இந்த நிகழ்ச்சிக்கு புதிய அட்ராக்ஷனை கொடுத்து வருகிறார். வாரந்தோறும் அடுத்தடுத்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகிவரும் நிலையில், கடந்த தீபாவளியையொட்டி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்கள் உள்ளே நழைந்துள்ளனர்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக தொடர்ந்து 7 சீசன்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனிலும் பாதி கிணறுதாண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் புகுந்தனர். துவக்கத்திலேயே அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட சாச்சனா, மீண்டும் இந்த நிகழ்ச்சியில் நுழைந்தார். அடுத்தடுத்த போட்டியாளர்கள் வாரந்தோறும் எலிமினேட் ஆன நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக 6 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர்.
புதிய ஹோஸ்ட்: இந்த சீசனில் புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை கொடுத்ததோ இல்லையோ வாரயிறுதிகளில் அவரது ஹோஸ்ட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னுடைய தடாலடி பேச்சால் ரசிகர்களை கவர்ந்து நிகழ்ச்சியின் டிஆர்பிக்கும் காரணமாக அமைந்துள்ளார் விஜய் சேதுபதி. என்றபோதிலும் இவரது அதிரடியான பேச்சு நிகழ்ச்சியின் ஆண் போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் புதிய டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை நடந்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் முற்றிய சண்டை: கடந்த இரு தினங்களாக இந்த டாஸ்க் நடந்துவரும் நிலையில், இதிலிருந்து சௌந்தர்யா, ரானவ், தீபக், தர்ஷிகா, அன்ஷிதா, முத்து ஆகியோர் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர். மீதமுள்ள போட்டியாளர்கள் இந்த டாஸ்கை செய்துவந்த நிலையில் வெளியேறிய போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களை தடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெஃப்ரி, ரானவ், தயான் ஆகியோர் ஒரு பொம்மைக்காக போட்டியிட்ட நிலையில், ரயான் மற்றும் ரானவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே அடிதடியாக மாறியது. அவர்களிடையே ஏற்பட்ட இந்த அடிதடியை மற்ற போட்டியாளர்கள் தடுத்ததையும் பார்க்க முடிந்தது.
கொதித்தெழுந்த சௌந்தர்யா: இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதுவெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் ஜாக்குலின் மற்றும் ரானவ் இடையில் இதுகுறித்து வாக்குவாதம் முற்றுகிறது. இடையில் பேசிய சவுந்தர்யாவை அவர் வாயை மூடு என்று கூற, நீ யார் என்னை வாயை மூடு என்று சொல்வதற்கு என்றும் முதலில் மரியாதை கொடு என்றும் அவர் கொதித்தெழுந்துவிட்டார். தொடர்ந்து ஜாக்குலினிடம் ரானவ் சாரி கேட்க, சாரி, பூரி என்று பேயாட்டம் ஆடினார் சௌந்தர்யா. நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கால் இவர்களின் சண்டை முற்றி பிக்பாஸ் வீடே ரணகளப்பட்டது. இதன் அடுத்தடுத்த சம்பவங்களை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











