வயசை தாண்டிய விஷயங்களை பேசுறாங்க.. சாச்சனாவை நாமினேட் செய்த போட்டியாளர்கள்.. இன்றைய முதல் பிரமோ!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி இன்றைய தினம் 8வது நாளில் அடியடுத்து வைத்துள்ளது. இதன் முதல் பிரமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கான நாமினேசன் பிராசஸ் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதில் ரஞ்சித், சௌந்தர்யா, சாச்சனா உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
வாரயிறுதி நாட்களான நேற்றும் நேற்றைய முன்தினமும் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி இணைந்து போட்டியாளர்களை விளாசினார். அவரது ஹோஸ்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக அதிகரித்திருந்த நிலையில், அனைவரையும் தன்னுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் அதிகமாக கவர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி இன்றைய தினம் 8வது தினத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான முதல் பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. நேற்றும் நேற்றைக்கு முன்தினமும் வாரயிறுதி எபிசோட்களில் நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியின் துவக்க விழாவிலேயே மிடுக்காக போட்டியாளர்களை எதிர்கொண்ட விஜய் சேதுபதி, கடந்த இரு தினங்களில் போட்டியாளர்களை விளாசியதை பார்க்க முடிந்தது. பிக்னிக் வந்தது போல நடந்து கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டதையும் ஆட்டத்தை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் சொன்னதையும் கேட்டு போட்டியாளர்கள் அரண்டனர்.
எலிமினேட் ஆன ஃபேட்மேன்: கடந்த வாரத்தில் போட்டியாளர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை விஜய் சேதுபதி நேருக்கு நேராக பேசியதை பார்த்த போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் வாயடைத்து கொண்டனர். முன்னதாக 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வழிநடத்திய கமல்ஹாசனின் ஸ்டைலை தன்னுடைய ஹோஸ்டிங்கில் சிறிதும் கொண்டு வராமல் தனக்கே உரிய பாணியில் விஜய் சேதுபதி அடுத்தடுத்த போட்டியாளர்களை எதிர்கொண்டார். இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நேற்றைய தினம் தயாரிப்பாளர் ரவீந்தர் நிகழ்ச்சியிலிருந்து முதல் எலிமினேஷன் ஆக வெளியேறியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட ரஞ்சித்: ரவீந்தரிடம் சிறப்பாக பேசி ரஞ்சித்தை அவரிடம் மன்னிப்பு கேட்க வைத்து, இருவருக்கும் கட்டிப்புடி வைத்தியம் நடத்தியுள்ளார் விஜய் சேதுபதி. மன்னிப்பு கேட்குறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன் என்று அவர் கொடுத்த விளக்கமும் ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு பல விஷயங்களை செய்து ஃபேட்மனை வெளியே அனுப்பி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. முதல் வாரத்திலேயே அதிரடி சரவெடியாக அவரது நடவடிக்கைகள் காணப்பட்டன. இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் தற்போது நடந்து முடிந்துள்ளது. இது குறித்து இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இன்றைய முதல் பிரமோ: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது நாளான இன்றைய தினம் வெளியாகி உள்ள முதல் பிரமோவில், ஜெஃப்ரி, ரஞ்சித், சவுந்தர்யா, சச்சனா உள்ளிட்டவர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். ஜெஃப்ரியை தர்ஷா குப்தா, சாச்சனா, சவுந்தர்யா உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்துள்ளனர். கொஞ்சம் இடம் கொடுத்தாலும் அதை அதிகமாக பயன்படுத்திக் கொள்வதாக இதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ரஞ்சித்தை ஆர்ஜே ஆனந்தி, சுனிதா, தர்ஷிகா உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்தனர். அவர் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாமினேஷன் பிராசஸ்: இதையடுத்து சவுந்தர்யாவும் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை ரஞ்சித், அர்னவ், தீபக் உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்துள்ளனர். அவர் எந்த விஷயத்திலும் முயற்சி எடுப்பதில்லை என ரஞ்சித் கூறியுள்ளார். இதையடுத்து சாச்சனாவையும் போட்டியாளர்கள் நாமினேட் செய்ய, விஜே விஷால், தன்னுடைய வயதுக்கு மீறிய விஷயங்களை அவர் பேசுவதாக தோன்றுவதாக கூறியுள்ளார். பிக்பாஸ் போட்டியை சிறப்பாக விளையாடவும் பிக்னிக் வந்தது போல சீட்டை தேய்க்க வேண்டாம் என்றும் விஜய் சேதுபதி நேற்றைய தினம் காட்டமாக பேசியுள்ள நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி அடுத்தடுத்து மிகச் சிறப்பாக டாஸ்க்குகளையும் ஆட்டத்தையும் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











