Actress Swetha: லவ் லெட்டர் கொடுத்த பையன்.. அதிரடியாக சின்ன மருமகள் ஸ்வேதா செய்த சம்பவம்!
சென்னை: விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை தமிழ்ச்செல்வியாக கவர்ந்து வருபவர் நடிகை ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் மிகவும் பாந்தமாக நடித்துவரும் நிலையில் தன்னுடைய ஒரிஜினல் கேரக்டர் அப்படி இல்லை என்றும் ஸ்வேதா வேறு தமிழ்ச்செல்வி வேறு என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முதல் வணக்கம் நிகழ்ச்சியில் ஸ்டார்ஸ் டைரி செக்மெண்டிற்காக பேசியுள்ள ஸ்வேதா பல சுவாரஸ்யங்களை பகிர்ந்ததை பார்க்க முடிந்தது. சின்ன மருமகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் இந்த பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. சூட்டிங்கை இடையிடையில் சென்று கவனித்து வந்த ஸ்வேதா பேட்டியையும் சுவாரஸ்யம் ஆக்கினார்.

சின்ன மருமகள் சீரியல்: விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் மூலம் கவனத்தை பெற்று வருபவர் நடிகை ஸ்வேதா. இந்த சீரியலில் டாக்டராகும் கனவுடன் சுற்றி வரும் தமிழ்ச்செல்வி என்ற கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். சீரியலில் பிளஸ் டூ படிக்கும் போது தமிழ்செல்விக்கு திருமணம் செய்து வைக்கப்படும் சூழலில் தொடர்ந்து தன்னுடைய கனவை துரத்தும் வேலையில் நடைபோட்டு வருகிறார். இந்த சீரியலில் தன்னுடைய கனவிற்காக அடுத்தடுத்த விஷயங்களை தமிழ்ச்செல்வி போல்டாக செய்து வரும் சூழலில் இந்த சீரியலில் தமிழ்ச்செல்வியாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வரும் ஸ்வேதா, சீரியல் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
முதல் வணக்கம் ஷோ: விஜய் டிவியின் முதல் வணக்கம் ஷோவின் ஸ்டார்ஸ் டைரி செக்மெண்டிற்காக பேசியுள்ள ஸ்வேதா, தமிழ்ச்செல்வியிடம் தனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார். தமிழ்ச்செல்வியின் கனவும் அவரது கனவை நனவாக்க அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைளும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ள ஸ்வேதா, ஆனால் அவரிடம் இருக்கும் தயக்கம் மற்றும் உண்மையை கூற அவர் முனைப்புடன் இருப்பது தனக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார். இதனிடையே பிளஸ் டூ படிக்கும் போதே தமிழ்செல்விக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சூழலில் ஸ்வேதா தனது பள்ளிக்கால நிகழ்வுகள் குறித்தும் பேசியுள்ளார்.
லவ் லெட்டர் கொடுத்த பையன்: தன்னுடைய பள்ளி காலத்தில் பல இன்ட்ரஸ்டிங்கான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாகவும் தனக்கு லவ் லெட்டர் கொடுக்க முயன்று சிக்கிய சக மாணவன் குறித்தும் ஸ்வேதா வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகம் தன்னை குற்றம் சாட்டி தன்னை சஸ்பெண்ட் செய்ய நினைத்த நிலையில் தான் அதிரடியாக பேசி தனக்கு இந்த நிகழ்வில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்ததாகவும் இதையடுத்து லெட்டர் கொடுக்க முயன்ற அந்த மாணவனை இரண்டு நாட்கள் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார். இது போன்ற பல அதிரடிகளை துணிச்சலான பல விஷயங்களை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஸ்வேதாவின் கனவு: தமிழ் செல்விக்கு டாக்டராகும் கனவு இருப்பது போல தனக்கும் சிறப்பான நடிகையாக மாற வேண்டும் என்ற கனவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கும் தமிழ்செல்விக்கும் எந்த வகையிலும் கேரக்டரில் ஒற்றுமை கிடையாது என்றும் ஸ்வேதா வேறு தமிழ் செல்வி வேறு என்றும் ஸ்வேதா தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீரியலுக்காக ஆடிஷன் வைத்து தன்னை செலக்ட் செய்ததை அடுத்து தனக்கு அதிகப்படியான உற்சகம் ஏற்பட்டதாகவும் இந்தக் கேரக்டருக்காக தான் மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் பிரியாணி லவ்வர் என்றும் கிடைத்தால் அதிகமாக வெட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











