CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அடுத்தடுத்து வெற்றிகரமாக 4 சீசன்களை நிறைவு செய்துவிட்டு விரைவில் 5வது சீசனை துவங்கவுள்ளது. கடந்த ஜனவரியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுனேயே தனது அடுத்த சீசனை குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள். எப்போதும் குக்குகள் தான் அதிகமாக மாற்றப்படுவார்கள். கோமாளிகளும் ஓரளவிற்கு ஒரே ஆட்களே காணப்படுவார்கள். ஆனால் இந்த சீசனில் நடுவர் வெங்கடேஷ் பட்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் நடுவர் தாமுவுடன் இணைந்துள்ளார்.

Vijay TV s Cooku with Comali 5 grand opening promo released

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. கடந்த சில தினங்களாகவே இதற்கான அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடனேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த மாற்றங்கள். இந்த 5வது சீசனில் நடுவர் வெங்கடேஷ் பட்டையே மாற்றியுள்ளது இந்த நிகழ்ச்சி. அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார்.

புதிய நடுவர் கூட்டணி: செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருந்த ப்ரமோவை சில தினங்களுக்கு முன்னதாக விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இதில் இவர்கள் இருவரும் புதிய கூட்டணி என்று கூறிக்கொண்டு விமானத்திலிருந்து இறங்குவதாக காணப்பட்டது. கடந்த 4 சீசன்களிலும் குக்குகள், கோமாளிகள் என பாரபட்சமின்றி கலகலப்பாக இணைந்து செயல்பட்டார் வெங்கடேஷ் பட். அவரது இந்த இடத்தை மாதம்பட்டி ரங்கராஜ் நிரப்புவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேபோல கடந்த சீசன்வரை இந்த நிகழ்ச்சியில் ரக்ஷன் மட்டுமே ஆங்கராக செயல்பட்டு வந்தார்.

Vijay TV s Cooku with Comali 5 grand opening promo released

இரண்டு ஆங்கர்கள்: இந்நிலையில் இந்த சீசனில் அவருடன் கோமாளி மணிமேகலையும் ஆங்கராக இணைந்துள்ளார். இவர்களின் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களும் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோவில் விமானத்திலிருந்து இறங்கிய நிலையில், சுனிதா, குரேஷ் ஆகியோரும் கோமாளிகளாக அதேபோல விமானத்திலிருந்து இறங்கி கெத்து காட்டினார். ஆனால் துவக்க சீசன் முதலே கோமாளியாக இருந்துவரும் புகழ், சைக்கிளில் புலம்பியபடியே வந்ததை பார்க்க முடிந்தது. தனி விமானம் கேட்டதால் தனக்கு இந்த நிலையில் என்று அவர் புலம்பித் தள்ளினார்.

பிரம்மாண்ட துவக்கத்திற்கான பிரமோ: இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் பிரம்மாண்ட துவக்கம் குறித்த பிரமோ வெளியாகியுள்ளது. இதில் குக்கர் சத்தமும் மக்களின் சிரிப்பு சத்தமும் இணைந்ததுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று ஆங்கர் ரக்ஷன் கூறுவதாக காணப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காட் ஃபாதர் என்று தாமு அறிமுகம் செய்து வைக்கப்பட, இந்த சீசன் அனைவரும் விரும்பும்வகையில் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜும் இந்தப் பிரமோவில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். நிகழ்ச்சி புதிதாக மாறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் நிகழ்ச்சி துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X