குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய ஆங்கர்.. மணிமேகலைக்கு பதில் இவரா.. இது எப்படி இருக்கு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் இவர்களுடன் இணைந்து நடுவர்களும் செய்த அலப்பறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இந்த நிகழ்ச்சி ஸ்டெஸ் பஸ்டராக உள்ளதாக ரசிகர்களே பாராட்டும்வகையில் அமைந்து வந்தது.
ஆனால் இந்த 5வது சீசனில் தொடர்ந்து பல மாறுதல்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த நடுவர் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கினார். நிகழ்ச்சியில் புதிய கோமாளிகளும் இணைந்த நிலையில், நிகழ்ச்சியில் அருவருக்கத்தக்க வகையில் பல விஷயங்களும் அரங்கேறின.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து முதல் சீசனிலிருந்தே கோமாளியாக செயல்பட்டு வந்தவர் ஆங்கர் மணிமேகலை. இவர் தொடர்ந்து 4 சீசன்களில் கோமாளியாக இருந்த நிலையில், இந்த சீசனில் இவர் ஆங்கராக இணைந்து ரக்ஷனுடன் சிறப்பாக செய்லபட்டார். இவருக்கு துவக்கத்திலிருந்தே ஆங்கராக செயல்பட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது.
ஆங்கர் மணிமேகலை: ஆனால் இவரது அந்த கனவை நனவாக்க விடாமல் போட்டியில் குக்காக செயல்பட்ட ஆங்கர் பிரியங்கா தடுத்ததாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய மணிமேகலை, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியிலிருந்து விலகினார். பணம், புகழ் இவற்றை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என்று இவர் கூறியிருந்த நிலையில், இவருக்கு ஆதரவாக பலரும் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனிடையே பிரியங்காவிற்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்தவர்களை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வைத்து வாங்கினார் மணிமேகலை. அவர்களை சொம்புகள் என்று மணிமேகலை கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
புதிய ஆங்கராக விடிவி கணேஷ்: இதனிடையே, குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி இந்த வாரம் பிரம்மாண்டமாக இறுதிப்போட்டிக்கு தயாராகியுள்ள நிலையில், இதில் மணிமேகலைக்கு பதிலாக யார் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்தது. மணிமேகலைக்கு பதிலாக புதிய ஆங்கர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைவார்களா அல்லது ரக்ஷனை மட்டுமே வைத்து முடித்து விடுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தற்போது இந்த நிகழ்ச்சியின் பிரமோக்கள் பதிலாக அமைந்துள்ளன. குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து விடிவி கணேஷ் ஆங்கராக செயல்பட்டுள்ளார்.
கேள்வி கேட்ட செஃப் தாமு: இந்த பிரமோவில் அடுத்தடுத்து ஹாய், ஹலோ வெல்கம் டூ குக் வித் கோமாளி என்று வரவேற்க ரக்ஷன் கற்றுக் கொடுக்க, அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருக்கு விடிவி கணேஷ், ஒரு கட்டத்தில் 10 முறையா சொல்லிக் கொடுப்பாய் என்று கேட்பதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. ஆனாலும் இந்த வெல்கம் டயலாக்கை சொல்லும்போது அவர் சொதப்பியதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து செஃப் தாமு, யாரு ஆங்கர், எனக்கு புரியவில்லை என்று கூறுவதாகவும், உடனே குரேஷி, நிகழ்ச்சி வெறித்தனமாக போய்க் கொண்டிருப்பதாக சொல்ல, விடிவி கணேஷ், முகமலர்ச்சியுடன் அவரை பார்ப்பதாகவும் காணப்பட்டது.

பிரம்மாண்ட இறுதிப்போட்டி: பிரியங்காவின் செயல்பாடுகளை காரணம் காட்டி நிகழ்ச்சியின் ஆங்கர் மணிமேகலை விலகியுள்ள நிலையில், அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகவும் ஹாட்டாக அடுத்தடுத்த சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. இருந்தபோதிலும், நாங்க இப்படித்தான் என்பதாக, அடுத்த ஆங்கரை களமிறக்கி நிகழ்ச்சியை முடித்துள்ளது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் இறுதிப்போட்டி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோககள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











