Cooku with comali 5: சக்கரவள்ளி சுய்யம். பக்கத்துல இருக்கறவங்களுக்கு பயம்.. ரைமிங்காக பேசிய புகழ்!

சென்னை: விஜய் டிவியின் கலக்கல் ஷோவான குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடும் சிறப்பாக காணப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குக் திவ்யா துரைசாமியுடன் சேர்ந்து கோமாளி புகழ், சக்கரவள்ளி கிழங்கு சுய்யம் செய்திருந்தார். இதற்கான பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தன்னுடைய டைமிங் காமெடியால் புகழ் இந்த நிகழ்ச்சியின் ஹீரோவாகவே மாறியுள்ளார்.

முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு அவர் செய்யும் பாடி லாங்குவேஜ் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் என்டர்டெயின் செய்து வருகிறது. தொடர்ந்து செஃப் தாமுவை, புகழ் அடுத்தடுத்து கலாய்ப்பதும் காணப்படுகிறது. இவ்வாறு இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டராக நிகழ்ச்சி அமைந்து வருகிறது.

Vijay TV s Cooku with comali 5 show s today episode promo

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: விஜய் டிவியின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த குக் வித் கோமாளி தற்போது தன்னுடைய ஐந்தாவது சீசனையும் துவங்கி வெற்றிகரமாக நடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுஜிதா. விடிவி கணேஷ் உள்ளிட்ட குக்குகளும் புகழ், சப்னம், ராமர் உள்ளிட்ட கோமாளிகளும் இணைந்து கலக்கி வருகின்றனர். கடந்த நான்கு சீசன்களில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட், இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல சமையல் கலை நிபுணர், மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் தாமுவுடன் இணைந்துள்ளார்.

Vijay TV s Cooku with comali 5 show s today episode promo

மாற்றங்களுடன் குக் வித் கோமாளி 5: மேலும் மற்றொரு முக்கியமான மாற்றமும் இந்த நிகழ்ச்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தர்ஷன் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக இருந்து வந்த சூழலில் இந்த சீசனில் மணிமேகலையும் அவருடன் ஆங்கராக இணைந்துள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இதற்கான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. இதில் குக் திவ்யா துரைசாமியுடன் சேர்ந்து கோமாளி புகழ் சக்கரவள்ளி கிழங்கு சுய்யம் செய்து அசத்தியிருந்தார். இந்த சுய்யம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

நிகழ்ச்சியின் பிரமோ: இதற்கான பிரமோ தற்போது வெளியான சூழலில் இந்த டிஷ் குறித்து விவரிக்க புகழ் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார். அவர் தனது பாட்டி குறித்து பேசத் துவங்க, பக்கத்தில் இருந்தபடி குக் சுஜிதா தொடர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதாக காணப்பட்டது. அவரது சிரிப்பு பார்ப்பவர்களுக்கே கடுப்பை ஏற்படுத்திய சூழலில் புகழ் மட்டும் கடுப்பாகாமல் தொடர்ந்து பதில் கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் சுஜிதா, தன்னுடைய சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து வெளியேற, உடனே அவரை பார்க்கும் புகழ் உங்கள் பாட்டி குறித்து பேசும்போது நான் கேட்டுக் கொண்டிருந்தேன், என் பாட்டி குறித்து பேசும்போது நீங்கள் ஏன் போகிறீர்கள் என்று கேட்பதாக இந்த ப்ரோமோவில் காணப்பட்டது.

செஃப் தாமுவை கலாய்த்த புகழ்: தொடர்ந்து இந்த சுய்யத்தில் என்னென்ன கலந்தீர்கள் என்று செஃப் தாமு திவ்யாவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் திவ்யா, சக்கரவள்ளி கிழங்கு, சுக்கு, ஏலக்காய் என ஒவ்வொன்றாக அடுக்குகிறார். இதையடுத்து சுக்கு எதற்காக சேர்த்தீர்கள் என்று தாமு கேள்வி எழுப்புகிறார். நீங்கள் இப்படி கேள்வி எழுப்ப வேண்டும் என்று தான் சேர்த்தோம் என்று பதிலுக்கு நக்கல் அடிக்கிறார் புகழ். ரசிகர்களை கவரும் வகையில் புகழின் டைமிங் காமெடிகளுடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது இந்த பிரமோ. எப்போதுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனும் சில பல மாற்றங்களுடன் இருந்தாலும் சிறப்பாகவே ரசிகர்களை என்டர்டைன் செய்து வருகிறது,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X