Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நான்கு சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இணைந்து நடுவர்களாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகியுள்ளார். இதுகுறித்து அவரே அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது இந்த சீசனில் பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரையும் அறிமுகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர்கள் ரக்ஷன் மற்றும் மணிமேகலையை மட்டுமில்லாமல் நிகழ்ச்சியின் கோமாளிகள் சிலரையும் இந்த பிரமோ வெளிப்படுத்தியுள்ளது. கோமாளிகளாக குரேஷி, சுனிதா, புகழ் மற்றும் புதிய வரவாக ராமரும் இந்த நிகழ்ச்சியில் இணையவுள்ளனர்.

Vijay TV s Cooku with comali anchor Rakshan salary details revealed

குக் வித் கோமாளி 5: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது/ இதற்கான அடுத்தடுத்த ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்டுள்ள முதல் ப்ரோமோவில் நடுவர்களின் அறிமுகத்தை விஜய் டிவி செய்து வைத்தது. கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்ட வெங்கடேஷ் பட் தற்போது இந்த சீசனிலிருந்து விலக்கியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக பிரபல சமையல்கலை நிபுணர் மாதம் பட்டி ரங்கராஜ் செஃப் தாமுடன் இணைந்துள்ளார்.

புதிய நடுவர் கூட்டணி: செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருந்த முதல் பிரமோவை விஜய் டிவி சிறப்பாக வெளியிட்டது. இவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வருவதாக காட்டப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது பிரமோவில் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகள் மற்றும் ஆங்கர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியின் கடந்த நான்கு சீசன்களை ரக்ஷன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் அவருடன் மணிமேகலையும் இணைந்து ஆங்கராக செயல்பட உள்ளளார். இதுகுறித்து இரண்டாவதாக வெளியாகியுள்ள பிரமோவில் அறியப்பட்டுள்ளது.

புதிய கோமாளிகள்: நிகழ்ச்சியின் கோமாளிகளாக குரேஷி, சுனிதா ஆகியோர் விமானத்திலிருந்து இறங்குவதாக இந்த பிரமோவில் காட்டப்பட்டது. இதனிடையே நிகழ்ச்சியின் துவக்கம் முதலே புகழ் கோமாளியாக செயல்பட்டு வருவதால் அவர் மாஸாக என்ட்ரி கொடுப்பார் என்று குரேஷி கூறுவதாக காட்டப்படுகிறது. ஆனால் புகழோ சைக்கிளில் மாங்கு மாங்கு என்று ஓட்டிக்கொண்டு வருவதாக காட்டப்பட்டுள்ளது. முதலிலேயே கேட்டது போல விமானத்திலேயே வந்து இறங்கி இருக்கலாம், தனி விமானம் கேட்டதால் சைக்கிள் மிதிக்க விட்டுவிட்டார்கள் என்று அவர் அங்கலாய்ப்பதாகவும் பிரமோவில் காட்டப்படுகிறது.

ஆங்கர் ரக்ஷன் சம்பளம்: இந்நிலையில் அவருடன் காமெடியன் ராமரும் இணைந்துள்ளதாகவும் பிரமோவில் உள்ளது.முன்னதாக விமானத்திலிருந்து ரக்ஷன் மற்றும் மணிமேகலை மிக அழகான கெட்டப்பில் இறங்குவதாகவும் காட்டப்பட்டது. இதனிடையே நடிகராகவும் மாறியுள்ள இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன் என்ன சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகராகவும் மாறியுள்ள ரக்ஷன், மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் அவர் இந்த சீசனில் மிக அதிகமான சம்பளத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X