Eeramaana Rojaave: காவ்யா கர்ப்பம் கலைந்ததற்கு பார்த்திதான் காரணம்.. பிரியா குற்றச்சாட்டு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர் காணப்படுகிறது.

இரட்டை குழந்தைகளை காவ்யா சுமந்துவந்த நிலையில், அவருக்கு கர்ப்பம் கலைந்து குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.

இதையடுத்து பார்த்தி மற்றும் குடும்பத்தினரின் வெறுப்பிற்கு உள்ளாகியுள்ளார் காவ்யா. இதனால் குடும்பத்தில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Vijay TVs Eeramaana Rojaave serial new promo makes fans happy

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரின் புதிய ப்ரமோ: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக உள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்தத் தொடரில் சந்தர்ப்பம் மற்றும் சதி காரணமாக ஜோடி மாறி திருமணம் நடைபெற, ஜீவா மற்றும் காவ்யாவின் காதல் சிதைகிறது. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட புதிய வாழ்க்கையை ஏற்க முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தங்களது துணைகளை ஏற்று காதலிக்க துவங்குகின்றனர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் புதிய வாழ்க்கையை அவர்கள் ஏற்க முடியாமல் செய்கிறது.

இதனிடையே பார்த்தியுடன் காவ்யா வாழத் துவங்குகிறார். ஆனால் ஜீவாவுடன் அவருக்கு இருந்த காதல், பார்த்திக்கு தெரியவருவதால் அவர்களது குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. அத்தை தேவியும் அவரை தொடர்ந்து மூட்டி விடுகிறார். இதனால் காவ்யா மற்றும் பார்த்தியின் குடும்ப வாழ்க்கை பாதிக்கிறது. இதனிடையே காவ்யா கர்ப்பமாகிறார்.

Vijay TVs Eeramaana Rojaave serial new promo makes fans happy

இந்த விஷயத்தை தன்னுடைய கணவனிடம் சொல்ல முடியாமல் அவர் தவிக்க, ஒருகட்டத்தில் உண்மை தெரியவரும் பார்த்தி, அதிர்ச்சியடைகிறார். ஆனாலும் தன்னுடைய குழந்தைகளுக்காக காவ்யாவை ஏற்க முன்வருகிறார். ஆனால் தனக்கு தன்னுடைய குழந்தைகள்தான் முக்கியம் என்று காவ்யாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் காவ்யா, ஐஏஎஸ் பரிட்சை எழுதுவதற்காக டெல்லி செல்ல, அங்கே அவருக்கு கர்ப்பம் கலைகிறது.

இந்த விஷயத்தையும் பார்த்தி மற்றும் குடும்பத்தினரிடையே சொல்ல முடியாமல் தவிக்கிறார் காவ்யா. ஒரு கட்டத்தில் அவர் குடும்பத்தினரிடையே உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் பார்த்தி மற்றும் குடும்பத்தினர், குழந்தைகளை காவ்யா கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். குடும்பத்தினர் தன்னை ஒதுக்க உடைந்து போகிறார் காவ்யா. இந்நிலையில் அவரை தேற்றுகிறார் பிரியா.

Vijay TVs Eeramaana Rojaave serial new promo makes fans happy

ஜீவாவிற்கும் காவ்யாவிற்கும் முன்னதாக இருந்த காதலால் ஜீவாவை தனிக்குடித்தனம் போக அழைத்து வரும் பிரியா, தன்னுடைய தங்கை காவ்யாவின் மன உளைச்சலை போக்க களமிறங்குகிறார். காவ்யாவின் கர்ப்பம் கலைந்ததற்கு பார்த்திதான் காரணம் என்று அவர் குடும்பத்தினரிடையே சண்டை போடுகிறார். பார்த்தி காவ்யாவிற்கு கொடுத்த மனஉளைச்சலால்தான் கர்ப்பம் கலைந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.

கர்ப்பப்பை பலகீனமானவர்கள்கூட தற்காலத்தில் உள்ள சிறப்பான மருத்துவ வசதிகளால், குழந்தையை சிறப்பாக பெற்றுக் கொள்ளும் நிலையில், எந்தவித பிரச்சினையும் இல்லாத காவ்யாவிற்கு, பார்த்தி கொடுத்த குடைச்சல்தான் அவரது கர்ப்பம் கலைய காரணம் என்றும் அதனால் இந்த விஷயத்தில் காவ்யாவை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்றும் ப்ரியா கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியாமல் பார்த்தி மட்டுமில்லாமல் அவரது அம்மாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஒரு கணவனின் அன்பே பெண்ணை பலப்படுத்தும் என்றும் அவனுடைய கோபம் பலகீனப்படுத்தும் பிரியா கூறுகிறார். கணவனின் சப்போர்ட் இருந்தால் ஒரு பெண்ணால் நல்லபடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பிரியா குடும்பத்தினரிடையே கூறுகிறார். மேலும் கர்ப்பம் கலைந்ததற்கு காவ்யா மட்டுமில்லாமல் பார்த்தியும்தான் முக்கியமான காரணம் என்றும் பிரியா தொடர்ந்து தன்னுடைய குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X