Eeramaana Rojave 2: தனிக்குடித்தனம் குறித்து மாமனாரிடம் பேசிய ப்ரியா.. அதிர்ச்சியில் பார்வதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே 2 தொடர் இருந்து வருகிறது. ரசிகர்களை இதன் அடுத்தடுத்த எபிசோட்கள் கவர்ந்து வருகின்றன.

இந்தத் தொடரில் ஜீவா மற்றும் காவ்யா இருவரும் காதலித்த நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்கள் தங்களது காதலை தியாகம் செய்துவிட்டு காவ்யா ஜீவாவின் அண்ணனையும் ஜீவா காவ்யாவின் அக்காவையும் திருமணம் செய்கின்றனர்.

தங்களது காதலை மறக்க முடியாமல் துவக்கத்தில் அவர்கள் தவித்த நிலையில், தற்போது அவர்களது காதல் குறித்து தெரிந்துக் கொண்டுள்ள பார்த்தி மற்றும் பிரியா, காவ்யா மற்றும் ஜீவாவை ஏற்க முடியாத மனநிலையில் உள்ளனர்.

Vijay TVs Eeramaana Rojave 2 this week promo released and impressed fans 09-07-2023

ஈரமான ரோஜாவே 2 இந்த வார ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2. இந்தத் தொடரில் இரண்டு ஆண்டுகளாக காதலிக்கும் ஜீவா மற்றும் காவ்யா, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தங்களது காதலை தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஜீவா காவ்யாவின் அக்கா பிரியாவையும், காவ்யா ஜீவாவின் அண்ணன் பார்த்தியையும் திருமணம் செய்யும் சூழல் உருவாகிறது. இதையடுத்து தங்களது காதலை மறக்க முடியாமல் ஜீவா மற்றும் காவ்யா இருந்தனர்.

காலங்கள் மாற, கோலங்களும் மாறியது. அவர்கள் தங்களது துணையின் அருமையை புரிந்துக் கொண்டு, அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்த நேரத்தில் அவர்களின் அத்தை தேவியின் சூழ்ச்சியால் ஜீவா மற்றும் காவ்யாவின் காதல், பார்த்தி, பிரியா மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியவருகிறது. இதனால் அவர்கள் பிரியும் சூழலும் ஏற்படுகிறது. பிரியா மற்றும் ஜீவாவின் பிரிவு வெளிப்படையாக காணப்படும் நிலையில், பார்த்தி மற்றும் காவ்யா மற்றவர்களுக்கு இணைக்கமான தம்பதிகளாக தங்களை காட்டிக் கொள்கின்றனர்.

இதனிடையே காவ்யா கர்ப்பமாகிறார். அவரது கருவில் இரட்டை குழந்தைகள் உள்ளதை டாக்டர்கள் உறுதி செய்கின்றனர். இதனால் பார்த்தியின் மனம் மாறும் என்ற எதிர்பார்ப்பும் தற்போது பொய்யாகியுள்ளது. இதனிடையே காவ்யா மற்றும் பார்த்தி இருவரும் மனமொத்து வாழவில்லை என்பது அவரது மாமனார் மற்றும் மாமியாருக்கு தெரியவருகிறது. இந்த விஷயத்தை வெளியில் காட்டாமல் இருவரும் இருந்த நிலையில், தன்னுடைய அப்பா, அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிறார் பார்த்தி.

இதனிடையே தேவி அத்தை பார்த்தி மற்றும் பிரியாவின் மனதில், ஜீவா மற்றும் காவ்யா குறித்து கேவலமான எண்ணங்களை தொடர்ந்து விதைக்கின்றனர். ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போகும்படி அவர் அறிவுறுத்த, அதையே மனதில் ஏற்றுக் கொள்ளும் பிரியா, ஜீவாவிடம் இதுகுறித்து பேசுகிறார். ஜீவா இந்த விஷயத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரிடமும் இதுகுறித்து பேசுகிறார்.

இதுகுறித்து அவர்கள் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். தன்னுடைய மகனை தன்னிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்று பார்வதி கதறுவதாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது. தன்னுடைய கணவனின் அன்பை பெறுவதற்கு காவ்யாவும், பிரியாவின் அன்பை பெறுவதற்கு ஜீவாவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் அவர்களிடம் இருவரும் வெறுப்பையே காட்டி வருகின்றனர். தொடர்ந்து இந்த கதைக்களத்திலேயே தொடர் பயணிப்பது ரசிகர்களுக்கு சிறிது அயர்ச்சியை கொடுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X