Eeramana Rojave 2: ஜீவா கண்ணில் குத்திவிடும் பிரியா.. என்ன மாதிரியான ரொமான்ஸ் இது!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது ஈரமான ரோஜாவே 2 சீரியல்.
பார்த்திபன் -காவ்யா, ஜீவா -பிரியா என ஜோடிகளின் திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம் அவர்களது வாழ்க்கையை பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த ஜோடி, தங்களது துணையுடன் இணைய முடியாமல் மனக்குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். இவர்களை சேர விடாமல் அந்த வீட்டை சேர்ந்த தேவி தொடர்ந்து சதித்திட்டங்களை அரங்கேற்றுகிறார்.

ஜீவா கண்ணில் குத்திவிடும் பிரியா: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ள தொடர் ஈரமான ரோஜாவே. இந்த வார அர்பன் கேட்டகரியில் இந்தத் தொடர் அதிகமான புள்ளிகளை பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரில் ஜீவா மற்றும் காவ்யா காதலிக்க, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்கள், ஜோடி மாறி அக்கா பிரியாவையும் அண்ணன் பார்த்திபனையும் திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் தொடர்ந்து எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. தங்களின் காதலை மறக்க முடியாமல் பார்த்திபனை காவ்யாவும் பிரியாவை ஜீவாவும் ஏற்க முடியாமல் தவித்த நிலையில், காரணம் தெரியாமல் அவர்களும் குழப்பத்தில் செய்வதறியாமல் திகைக்கின்றனர். இதனிடையே, ஜீவா மற்றும் காவ்யா இருவரும் தங்களது துணையின் அன்பை புரிந்துக்கொண்டு அவர்களை ஏற்கும் சூழல் ஏற்படுகிறது.
ஆனால், அவர்களது திருமணத்திற்கு முந்தைய காதல் குறித்து தெரியவரும்நிலையில், அவர்கள் தங்களுக்கு உண்மையாக இருந்து தங்களது காதலை வெளிப்படுத்தத் தவறியதாக பார்த்திபனும் பிரியாவும் தற்போது அவர்களை ஏற்காமல் ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு, தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே காவ்யா கர்ப்பமாவதும் பிரச்சினையை தீவிரமாக்குகிறது.
ஆனாலும் தன்னுடைய குழந்தைகளை சுமக்கும் காவ்யாவை பார்த்திபன் கொண்டாடுகிறார். அவருக்காக பல விஷயங்களை செய்கிறார். ஆனால் தன்னுடைய குழந்தைகளுக்காகத்தான் அனைத்தையும் செய்வதாகக்கூறி காவ்யாவின் மனதை காயப்படுத்துகிறார். இதனிடையே, காவ்யாவும் ஜீவாவும் ஒன்றாக இருக்கும் வீட்டில் தான் இருக்க மாட்டேன் என்று கூறி பிரியா வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் செல்கிறார். இதற்கு ஜீவா ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர் தனியாகவே செல்கிறார்.
இதனிடையே, தனியாக சென்று பால் காய்ச்சும் பிரியாவிற்கு புதிய வீட்டில் விபத்து ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்குவரும் ஜீவா, அவரை மீட்டு மருத்துவமனைக்கும் அழைத்து செல்கிறார். இதையடுத்து அவருக்கு உணவு கொடுக்கும் ஜீவா, பல உதவிகளை செய்கிறார். அந்த நேரத்தில் அவர் தன்னுடைய ரொமான்சை துவங்க, அவரது கண்ணில் குத்துகிறார் பிரியா. இவ்வாறு அடுத்த வாரத்தின் பிரமோ சுவாரஸ்யமாக செல்கிறது.


Click it and Unblock the Notifications











