Eeramana Rojave 2: ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டும் அர்ஜூன்.. கண்ணீரில் தத்தளிக்கும் சக்தி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான ஈரமான ரோஜாவே 2 சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அர்ஜூன் மற்றும் சக்தி இருவரும் காதலித்த நிலையில், தங்களது குடும்பத்தினருக்காக தங்களது காதலை விட்டுக் கொடுக்கின்றனர்.

Vijay TVs Eeramana Rojave 2 serial this week promo released Fans thrilling

இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டு அர்ஜூனுக்காக ஓடி வருகிறார் சக்தி.

நடந்தேறிய அர்ஜூன் திருமணம்.. பரிதவிப்பில் சக்தி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாஸ் காட்டி வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல், இந்த தொடரில் ஜீவா மற்றும் காவ்யா இருவரும் காதலித்த நிலையில், திருமணத்தின்போது பிரியா கடத்தப்படுவதால் ஜோடி மாறி திருமணம் நடைபெறுகிறது. ஜீவா -பிரியா மற்றும் பார்த்திபன் -காவ்யாவிற்கு திருமணம் நடத்தப்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள் என கடந்த பல மாதங்களாக கதைக்களம் காணப்பட்டது.

தற்போது இரு ஜோடிகளும் தங்களை புரிந்துக் கொண்டு, ஒன்று சேர்ந்துள்ள நிலையில், பார்த்தி மற்றும் ஜீவாவின் தம்பி அர்ஜூனின் திருமணம் அரங்கேறுகிறது. அவர் முன்னதாக பிரியா, காவ்யாவின் தங்கை சக்தியை காதலித்த நிலையில், தன்னுடைய அப்பா கொடுத்த வாக்கிற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்கிறார். இதேபோல சக்தியும் தன்னுடைய அப்பா வாங்கிய 2 கோடி ரூபாய் கடனுக்காக தன்னுடைய காதலை விட்டுக் கொடுக்க முன்வருகிறார்.

இருவருக்கும் ஒரே நாளில் வேறு வேறு இடங்களில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் காதல் குறித்து தோழி ஒருவர் மூலம் தெரிந்துக் கொள்ளும் பிரியா மற்றும் காவ்யா, தன்னுடைய பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் இதை வெளிப்படுத்தி திருமணத்தை மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நிறுத்துகின்றனர். சக்தியை கண்மூடித்தனமாக காதலிக்கும் மாப்பிள்ளை கவின், இந்தத் திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்கிறார்.

இதையெல்லாம் மீறி திருமணத்தை நிறுத்தும் பிரியா -காவ்யா, குடும்பத்தினருடன் அர்ஜூன் திருமணம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு முன்னதாகவே ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டுகிறார் அர்ஜூன். இதனால் சக்தியின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை செய்துக்கொண்ட அர்ஜுனிடம் பிரியா கோபத்துடன் கேள்வி கேட்கிறார். விருப்பமில்லாமல் நடந்த இந்த திருமணம் செல்லாது என்று கூறுகிறார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் அர்ஜூன் திணறுகிறார். இந்நிலையில், அர்ஜூனை சக்திதான் ஒருதலையாக காதலித்திருப்பார் என்று அவரது அத்தையும் மாமியாருமான மஞ்சுளா குற்றம் சாட்டுகிறார். இதனால் அவர்களின் காதல் கேள்விக்குறியாகிறது. இதையடுத்து பரிதவிப்புடன் அர்ஜூனிடம், தான் மட்டும்தான் காதலித்தேனா, அர்ஜூன் காதலிக்கவில்லையா என்று கண்ணீருடன் சக்தி கேள்வி எழுப்புகிறார். இதுகுறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X