Kizhakku vaasal: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. தயாளனுக்கு சவால்விடும் ரேணுகா!
சென்னை: விஜய் டிவியின் கிழக்கு வாசல் தொடர் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.
இந்த தொடரில் ரேணுகா மற்றும் விக்ரமிற்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக திருமணத்தையொட்டிய பரபரப்பு காட்சிகள் ஒளிபரப்பாகின.

இதனிடையே தற்போது தயாளனின் சூழ்ச்சிக்கு பலியான அர்ஜூன், திருமணத்தை நிறுத்திய நிலையில், அந்த இக்கட்டான மனநிலையிலிருந்து ரேணுகா உடனடியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
கிழக்கு வாசல் தொடர்: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது கிழக்கு வாசல். பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும் முன்னணி இயக்குநருமான எஸ்ஏசி இந்தத் தொடரின் லீட் கேரக்டரில் நடித்து வருவது தொடருக்கு மிகப்பெரிய அட்ராக்ஷனாக உள்ளது. இந்த தொடர் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை கூறுவதாக அமைகிறது. தன்னுடைய வளர்ப்பு மகளாக இருந்தாலும் அவரை தன்னுடைய சொந்த மகளாக நடத்தும் கேரக்டரில் எஸ்ஏசி நடித்துள்ளார்.

தயாளனின் சூழ்ச்சி: தன்னுடைய மகளின் வாழ்க்கைக்காக அவளது திருமணத்திற்காக தன்னுடைய வாழ்க்கையில் தான் முக்கியமாக கருதும் கிழக்கு வாசல் வீட்டை தன்னுடைய மைத்துனர் தயாளனின் சூழ்ச்சி தெரியாமல் 20 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கிறார். மேலும் தன்னுடைய குடும்பத்தினருக்கு இந்த விஷயம் குறித்து அவர் சொல்லாமல் செய்துள்ள இந்த விஷயம் தெரியவந்தால் என்ன மாதிரியான எதிர்ப்புகளை அவர் சந்திக்க நேருமோ என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
சிக்கலில் கிழக்கு வாசல் குடும்பம்: ரேணுகாவை மையமாக வைத்து தன்னுடைய அர்ஜூனுக்கு திருமணம் செய்வதாக கூறி தயாளன் செய்யும் சதி தெரியாமல் கிழக்கு வாசல் குடும்பமே தற்போது சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தது போல திருமணமும் நடக்காமல் தற்போது அவர்கள் அனைவரும் பரிதவிப்பில் உள்ளனர். ரேணுகா மீது மிகுந்த காதலுடன் இருந்த அர்ஜூனின் மனதை சிறிது சிறிதாக மாற்றி, சந்தேகத்தை அவர்மீது விதைக்கிறார் தயாளன்.
நின்றுபோன திருமணம்: தன்னுடைய தந்தையின் இந்த சூழ்ச்சி தெரியாமல் ரேணுகா மற்றும் சண்முகத்தை சந்தேகித்து ரேணுகாவுடனான தன்னுடைய திருமணத்தை நிறுத்துகிறார் அர்ஜூன். இதனால் ரேணுகா முடங்கிவிடுவாள் என்று தயாளன் தப்புக்கணக்கு போட, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னுடைய குடும்பத்தினர் மீளும்வகையில் தன்னுடைய மனநிலையையும் மாற்றிக் கொள்கிறார் ரேணுகா. திருமணம் நின்ற நிலையில், அடுத்த நாளே தன்னுடைய நாளை இனிதாக்கிக் கொள்ளும்வகையில் ஜாக்கிங் செல்கிறார்.
சவால் விடும் ரேணுகா: அவரை பார்க்கில் பார்க்கும் தயாளன், நக்கலடிக்க அதை பொருட்படுத்தாமல் ரேணுகா அவரிடம் தன்னம்பிக்கையுடன் பேசுகிறார். அவருக்கு உடலில் தெம்பிருந்தால் இன்னும் 5 வருடத்தில் தான் வழக்கறிஞராக மாறும்போது தன்னை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு ஜெயிக்க முயற்சிக்கலாம் என்றும் ஆனால் அது சாத்தியமில்லை என்றும் ரேணுகா தயாளனிடம் சவால் விடுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











