Kizhakku Vaasal: எங்க பொண்ணை தப்பா பேசாதீங்க.. தயாளனிடம் ஆத்திரப்பட்ட சாமியப்பன்!
சென்னை: விஜய் டிவியில் புதிதாக தன்னுடைய ஒளிபரப்பை துவங்கியுள்ளது கிழக்கு வாசல் தொடர். முதல் வாரத்திலேயே இந்தத் தொடர் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
இந்தத் தொடரில் லீட் கேரக்டரில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நடித்து வருகிறார். இது இந்தத் தொடருக்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

ரேணுகாவிற்காக தயாளனிடம் ஆத்திரப்பட்ட சாமியப்பன்: விஜய் டிவியின் தொடர்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தனது தொடர்களுக்கும் இந்த சேனல் கொடுத்து வருகிறது. வாரந்தோறும் வெளியாகிவரும் டிஆர்பியில் இந்தத் தொடர்கள் அதிகமான புள்ளிகளை பெற்று சேனலை சன் டிவிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் வைத்து வருகிறது. ரசிகர்களை இந்தத் தொடர்கள் வெகுவாக கவர்ந்து வருகின்றன. டிஆர்பியில் இடம்பெறாத சீரியல்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் வெளியேற்றி வருகிறது சேனல்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிவந்த பாரதி கண்ணம்மா 2 தொடரை கடந்த சில தினங்களுக்கு முடித்து வைத்தது விஜய் டிவி. தொடர்ந்து அந்த இடத்தில் தற்போது கிழக்கு வாசல் தொடர் இடம்பெற்றுள்ளது. கடந்த 7ம் தேதி முதல் இந்தத் தொடர் தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் பிரபல நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏசி முன்னணி கேரக்டரி சாமியப்பனாக நடித்து வருகிறார்.
மேலும் தொடரில் ரேஷ்மா, வெங்கட் ரங்கநாதன், அஸ்வினி, ஆனந்த் பாபு, தினேஷ் கோபாலசாமி, அருண், ரோஜாஸ்ரீ ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தத்து எடுத்த மகள் ரேணுகாவை குலசாமியாக கொண்டாடுகிறார் சாமியப்பன். அவரது அந்தப் பாசத்தின் மதிப்பை உணர்ந்து நடந்துக் கொள்கிறார் ரேணுகா. தன்னுடைய அப்பாவிற்காக தன்னுடைய காதலையும் விட்டுக் கொடுக்கிறார். தன்னுடைய மாமன் மகனான அர்ஜூனை ஏற்காமல் தன்னுடைய அப்பாதான் முக்கியம் என்கிறார்.
ஆனாலும் பணக்கார வீட்டு பையனான அர்ஜூன், தன்னை ரேணுகா கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் தான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் மறுநாள் ரிஜிஸ்டர் ஆபீசிற்கு வரவேண்டும் என்றும் மிரட்டுகிறார். தன்னுடைய மாமன் மகனான அர்ஜூனின் தற்கொலையை தடுக்கும்வகையில் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்கிறாள் ரேணுகா. ஆனால், அங்கே தன்னுடைய மாமன் மகனை காணாமல் தவிக்கிறார். என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பதற்கு முன்னதாக அங்கே வருகிறார் ரேணுகாவின் மாமா தயாளன்.
தன்னுடைய மகனை மயக்கி கல்யாணம் செய்துக் கொள்ளவே ரேணுகா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தன்னுடைய மகனை ரிஜிஸ்டர் ஆபீஸ் வராமல் தான் தடுத்ததாகவும் அவர் ரேணுகாவை குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து ரேணுகாவை அவரது வீட்டில் கொண்டு சென்று, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்துகிறார். ஆனால் தத்து பிள்ளையாக இருந்தாலும் ரேணுகா தவறு செய்ததை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை.
மாறாக. தயாளன் தேவையில்லாமல் தங்களது வீட்டு பெண்ணின்மீது குற்றம் சாட்டுவதாக கூறுகிறார்கள். தயாளன் மீதே அவர்களது குற்றச்சாட்டு காணப்படுகிறது. இதனால் ரேணுகா மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாகிறார். தன்மீது எந்த குற்றமும் இல்லை என்பதை தன்னுடைய தந்தை உணர்ந்ததை எண்ணி அவர் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகிறார். மேலும் ரேணுகாவின் மூத்த அண்ணியும் ரேணுகாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். மற்றவர்கள் குற்றம் சாட்டினாலும் தங்களின் வீட்டு பெண் குற்றமற்றவளாகத்தான் இருப்பாள் என்று குடும்பத்தினர் நம்புவது வரம் என்று நிரூபித்துள்ளது தொடர்.


Click it and Unblock the Notifications











