Kizhakku vaasal: ரேணுகாவிடம் உண்மையை கூறிவிட்டு உயிரிழக்கும் பாட்டி.. அடுத்து என்ன நடக்கும்?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் இடம்பெறும் முனைப்புடன் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது கிழக்கு வாசல் சீரியல். இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார். மேலும் ரேஷ்மா, வெங்கட் ரங்கநாதன், ஆனந்த் பாபு உள்ளிட்டவர்களும் இந்த தொடரில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத் தயாரிப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்த வருகிறது. இந்த தொடரில் கோயிலில் குழந்தையாக விடப்பட்ட ரேணுகாவை எடுத்து வளர்க்கும் சாமியப்பன் சந்திக்கும் பிரச்சினைகள் பேசப்பட்டு வருகின்றன.

இந்தத் தொடரின்மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார் இயக்குநர் எஸ்ஏசி. இந்த தொடர் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தின் தழுவலாக உருவாகியுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. அதற்கேற்ப, சாமியப்பன் கேரக்டரில், தன்னுடைய இரண்டு மகன்கள், மருமகள்கள், வளர்ப்பு மகள், தன்னுடைய தங்கை, அவரது மகன் மற்றும் மகள் என அனைவரையும் தாங்குபவராக நடித்து வருகிறார் எஸ்ஏசி. இந்தத் தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறி வருகிறது.

Vijay TVs Kizhakku vaasal serial new promo and episodes

கிழக்கு வாசல் தொடர்: வாரந்தோறும் வெளியாகிவரும் டிஆர்பியில் சன் டிவியை முந்த விஜய் டிவி தொடர்ந்து முயன்று வருகிறது. கடந்த வாரத்திற்கான டிஆர்பி வெளியான நிலையில் முதல் ஐந்து தொடர்களில் விஜய் டிவி சீரியல்கள் எதுவும் இடம்பெறவில்லை. 6வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் இடம்பெற்றுள்ளது. இந்த தொடர் விஜய் டிவியின் சீரியல்களில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய ஒளிபரப்பை துவங்கிய கிழக்கு வாசல் தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறது.

இயக்குநர் எஸ்ஏசி: இந்தத் தொடரின் சாமியப்பன் என்ற கேரக்டரில் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி நடித்து வருகிறார். அவருக்கு அழகான ஒரு குடும்பம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய மகன்கள், மருமகள்கள், வளர்ப்பு மகள், கணவனை இழந்த தங்கை மற்றும் அவரது மகன் மற்றும் மகள் என அதிகமானவர்களை தாங்கி அவர்களை அரவணைத்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை தன்னுடைய பிரச்சினையாக அணுகும் கேரக்டரில் இவர் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய மச்சானாக வரும் தயாளனின் சூழ்ச்சியில் இருந்தும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இவருக்கு காணப்படுகிறது.

ரேணுவை காதலிக்கும் ஷண்முகம்: சாமியப்பனின் தங்கை மகன், சண்முகம் அவரது வளர்ப்பு மகள் ரேலணுகாவை விரும்புகிறார். அதை அவரிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் ரேணுகாவின் உண்மையான அம்மா குறித்தும் தெரியவருகிறது. அந்த வகையில் தற்போது பாஞ்சாலியின் மகள் அனு, ஷண்முகத்தை விரும்புகிறார். இதனால் அவரை தன்னுடைய நிறுவனத்தின் மேனேஜராக நியமித்து அதனால் தன்னுடைய பெற்றோரிடம் திட்டு வாங்குகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய காதலை ஷண்முகத்திடமும் தன்னுடைய அம்மாவிடமும் அனு கூறுவதாக அமைந்துள்ளது.

Vijay TVs Kizhakku vaasal serial new promo and episodes

பாட்டியின் மறைவு: இதனிடையே இதுகுறித்து மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார் பாஞ்சாலி. தொடர்ந்து தன்னுடைய கணவனிடம் இதுகுறித்து அவர் பேச, அவரோ, ஷண்முகத்தின் கேரக்டர் குறித்து தான் விசாரித்ததாகவும் அவரை போல அனுவிற்கு சிறப்பான கணவன் கிடைக்க முடியாது என்றும் கூறுகிறார். இதைக்கேட்டு பாஞ்சாலி அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புதிய பிரமோவில் ரேணுகாவின் தாய் பாஞ்சாலிதான் என்ற உண்மையை ரேணுகாவிடம் கூறும் பாட்டி உயிரிழப்பதாக காட்டப்படுகிறது. உண்மையை தெரிந்த அவர் உயிரிழந்ததால் தற்போது பாஞ்சாலி -ரேணுகாவின் உறவு எப்படி வெளிப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X