Kizhakku Vaasal serial: எப்படி இந்த உண்மையை சொல்வது.. பரிதவிக்கும் ரேணுகா -ஷண்முகம்!
சென்னை: விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் பிரபல டைரக்டரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும் வெங்கட், ரேஷ்மா உள்ளிட்டவர்களும் இந்த சீரியலில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

கிழக்கு வாசல் தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் இடம் பெற முயற்சித்து வருகிறது கிழக்குவாசல் தொடர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய ஒளிபரப்பை துவங்கியுள்ள இந்த சீரியல், டிஆர்பியிலும் இடம்பெற்று வருகிறது. இந்த சீரியலில் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகர் லீட் கேரக்டரில் நடித்து வருவது சீரியலின் அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது. மேலும் வெங்கட், ரேஷ்மா உள்ளிட்டவர்களும் இந்த சீரியலில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
ராதிகா தயாரிப்பு: 25 ஆண்டுகளுக்கு மேலாக சன் டிவியில் சீரியல்களை தயாரித்துவந்த நடிகை ராதிகா, இந்த சீரியல் மூலம் விஜய் டிவிக்கு தாவியுள்ளார். முன்னதாக நடிகர் சஞ்சீவ் இந்த சிரியலில் ஹீரோவாக கமிட்டான நிலையில் தற்போது அந்த கேரக்டரில் வெங்கட் நடித்து வருகிறார். தொடரின் துவக்கத்திலேயே அதிகமான ரீச் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலின் நேர மாற்றம் தொடருக்கு சில பின்னடைவுகளை ஏற்படுததியுள்ளது.
சாமியப்பனாக எஸ்ஏசி: இந்த தொடரில் ரேணுகாவை கோயிலில் இருந்து எடுத்துவந்து வளர்க்கிறார் சாமியப்பன். இதனால் அவர் தன்னுடைய மகன் உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் அவமானப்பட நேர்கிறது. ஆனாலும் தன்னுடைய மகளை வழக்கறிஞராக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். இதனால் ஓய்வாக இருக்க வேண்டிய காலத்தில் மீண்டும் மெக்கானிக்காக தன்னுடைய வாழ்க்கையை தொடர்கிறார். இதனிடையே தன்னடைய மைத்துனன் தயாளனின் சூழ்ச்சி தெரியாமல் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்குகிறார்.
அர்ஜூன் குறித்த உண்மை: தயாளனின் மகன் அர்ஜூனுக்கும் ரேணுகாவிற்கும் திருமணம் செய்யப்படவிருந்த சூழலில், தயாளனின் சூழ்ச்சியால் அந்த திருமணம் நிற்கிறது. அந்தஸ்தை காரணம் காட்டி இந்த திருமணம் நிறுத்தப்பட, அதனால் குடும்பமே உடைகிறது. மேலும் வீட்டின்மீது கடன் வாங்கிய சாமியப்பன், தன்னுடைய மகன், மருமகள் ஆகியோரின் ஏச்சுக்கு உள்ளாகிறார். இதனிடையே தான் மிகவும் உயர்வாக நினைக்கும் லீடிங் லாயர் பாஞ்சாலியின் மகள் அனுவிற்கும் அர்ஜூனுக்கும் திருமண ஏற்பாடு நடப்பதை ரேணுகாவும் ஷண்முகமும் தெரிந்துக் கொள்கின்றனர்.
உண்மையை கூற ரேணுகா முயற்சி: இந்த விஷயத்தை பாஞ்சாலியிடம் கூற முடியாமல் தவிக்கிறார் ரேணுகா. தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிய அர்ஜூன், தற்போது அனு வாழ்க்கையிலும் நுழைய பார்ப்பதை கூற முடியாமல் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இதனிடையே, அனுவிற்கு டிரைவராக உள்ள ஷண்முகத்திற்கும் இந்த விஷயம் தெரியவர, அவர் ரேணுகா மூலம் பாஞ்சாலிக்கு இந்த விஷயத்தை தெரிவிக்க முயற்சிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











