Kizhakku vaasal serial: டபுள் ஆம்லெட்.. சிக்கன் 65.. தயாளன் சதியில் சிக்கிய நடேசன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாறி வருகிறது கிழக்கு வாசல் தொடர். இந்தத் தொடரில் முன்னதாக ரேணுவுடன் நடக்கவிருந்த திருமணத்தை தயாளன் மற்றும் அவரது மகன் அர்ஜூன், ஸ்டேடசை காரணம் காட்டி நிறுத்திய நிலையில், தற்போது அர்ஜூனுடன் நடக்கவிருந்த திருமணத்தை மூத்த வழக்கறிஞர் பாஞ்சாலியின் மகள் திருமண மேடையில் வைத்து நிறுத்தியுள்ளார். இதனால் சாமியப்பன் குடும்பத்தினர் பட்ட வேதனையை, தயாளன் மற்றும் அர்ஜூன் குடும்பத்தினர் பட்டு வருகின்றனர். ஆனால் தன்னுடைய வேதனையை அடுத்தடுத்த சதித்திட்டங்களை போடுவதன்மூலம் போக்கி வருகிறார் தயாளன்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கிழக்கு வாசல் தொடரில் சாமியப்பனாக பிரபல இயக்குநர் எஸ்ஏசி நடித்து வருகிறார். அவரது மச்சானாக பிரபல நடிகர் ஆனந்த் ராஜ் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் ரேஷ்மா, வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்த தொடரில் திருமண ஏற்பாடுகள் மற்றும் நின்றுப் போன திருமணம் உள்ளிட்ட காட்சிகள் ஒளிபரப்பாகிய நிலையில், தற்போது தொடரின் கேரக்டர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் ஆசுலாசம் தேவைப்படுவதை உணர்ந்துள்ளார் சிரியல் இயக்குநர்.

கிழக்கு வாசல் தொடர்: விஜய் டிவியின் முதல் 10 தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது கிழக்கு வாசல் தொடர். இந்தத் தொடர் பிக்பாஸ் 7 உள்ளிட்ட காரணங்களால் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் 7 இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில், மீண்டும் இந்தத் தொடர் பிரைம் டைமில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் எஸ்ஏசி, ரேஷ்மா, வெங்கட், ஆனந்த் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தொடரில் தற்போது ஏற்காட்டிற்கு லீட் கேரக்டர்கள் பயணம் செல்வதாக அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஏற்காடு டிரிப்: நிலம் ஒன்றின் ரிஜிஸ்ட்ரேஷனுக்காக அனு, ரேணுகா மற்றும் ஷண்முகம் ஏற்காடு செல்கின்றனர். இதேபோல அர்ஜூனும் ஏற்காடு வருவதாக காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியாகவுள்ளதை பிரமோக்களின்மூலம் அறிய முடிகிறது. அனுவை கொல்ல அர்ஜூன் திட்டம் தீட்டுவதாகவும் அதில் ஷண்முகம் சிக்கிக் கொள்வதாகவும் அடுத்தடுத்த எபிசோட்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனுவிற்கு கொடுக்கப்படும் காபியில் விஷம் கலந்துள்ளது தெரியாமல் ஷண்முகம் அதை குடிப்பதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் இடம்பெற்றுள்ளது.
தயாளனின் சதித்திட்டம்: இந்நிலையில் இன்றைய எபிசோடில் நடேசனை கொண்டு, சாமியப்பனை பழிவாங்க தயாளன் திட்டமிட்டுள்ளது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடேசன் முன்னதாக வங்கியில் பணத்தை கையாடல் செய்து மாட்டிய நிலையில், அவரை தயாளன் காப்பாற்றுவதாக சூழ்நிலை அமைந்த நிலையில், தற்போது நடேசனை தொடர்ந்து குடிக்க வைத்து அவரை தன்னுடைய அடிமையாக்கப் போவதாக தயாளன் தன்னுடைய மனைவியிடம் கூறுகிறார். இந்த சூழ்ச்சி தெரியாமல் நடேசன் அவரது வீட்டிலேயே தொடர்ந்து குடிக்கிறார். டபுள் ஆம்லெட், சிக்கன் 65 வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.
தயாளன் சதியில் சிக்கிய நடேசன்: இந்நிலையில் நடேசன் வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமாகும் அவரது மனைவி பார்வதி, தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள அவரது மொபைலுக்கு கால் செய்கிறார். இந்தக் காலை அட்டெண்ட் செய்ய முடியாமல் குடிபோதையில் நடேசன் மயக்கமாக இருக்க, அவரது காலை கட் செய்யும் தயாளன், தொடர்ந்து நடேசனுக்கு இந்த விஷயம் தெரியாதபடி காலை சைலெண்ட்டில் போடுகிறார். குறைந்தது 24 மணிநேரமாவது நடேசனை தேடி சாமியப்பன் உள்ளிட்ட குடும்பத்தினரை பரிதவிக்க செய்ய வேண்டும் என்று தயாளன் திட்டமிடுகிறார். இந்த சதியில் அவரது மனைவியும் அவருக்கு துணை நிற்பதாக இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











