Kizhakku vaasal serial: அனுவை கொல்லத் துணிந்த விக்ரம்.. சதியை முறியடித்த ஷண்முகம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது கிழக்கு வாசல். இந்த தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய பயணத்தை துவங்கியது. பிரபல இயக்குநர் எஸ்ஏசி, ரேஷ்மா, வெங்கட், ஆனந்த் பாபு என இந்த சீரியலில் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்து வருகிறது. இந்த சிரியல் பிக்பாஸ் உள்ளிட்ட காரணங்களால் பிற்பகலுக்கு நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி மீண்டும் பிரைம் டைமிற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரியலில் லீட் கேரக்டரில் சாமியப்பன் என்ற கேரக்டரில் எஸ்ஏசி நடித்து வருகிறார். அவரது வளர்ப்பு மகளாக ரேஷ்மாவும், தங்கை மகன் ஷண்முகமாக வெங்கட்டும் நடித்து வருகிறார்கள். தன்னுடைய வளர்ப்பு மகளை மற்றவர்கள் வெறுத்தாலும் சாமியப்பனும் அவரது மனைவியும் அவரை கொண்டாடுகிறார்கள். தன்னுடைய பாரம்பரிய வீட்டை தன்னுடைய வளர்ப்பு மகளின் திருமணத்திற்காக அடகு வைத்து 20 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார் சாமியப்பன். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதுடன் மகளின் திருமணம் நிற்பதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

கிழக்கு வாசல் தொடர்: விஜய் டிவியில் கடந்த சில வாரங்ளுக்கு முன்பு துவங்கப்பட்டது கிழக்கு வாசல். சன் டிவியில் அதிகமாக சிறப்பான சீரியல்களை கொடுத்துவந்த ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம், இந்த சீரியலை விஜய் டிவிக்காக உருவாக்கியுள்ளது. இந்த தொடரில் பிரபல தமிழ்ப்பட இயக்குநர் எஸ்ஏசி லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து ரேஷ்மா, வெங்கட், ஆனந்த் பாபு உள்ளிட்டவர்களும் இந்த தொடரில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சாமியப்பனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கோயிலில் கைக்குழந்தையாக விட்டு செல்லப்பட்ட பெண் குழந்தையை எடுத்துவந்து வளர்க்கிறார்.
வளர்ப்பு மகள் ரேணுகா: இதனால் குடும்பத்திலும் வெளியுலகிலும் அவருக்கு எதிர்ப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக அவரது மனைவியின் தம்பியிடமும் அதிகமாக எதிர்ப்பு காணப்படுகிறது. ரேணுகாவை தொடர்ந்து தயாளன் மட்டம் தட்டுவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் சாமியப்பன் தன்னுடைய மகளுக்காக எதையும் செய்வார் என்ற அவரது வீக்னசை பயன்படுத்திக் கொண்டு மற்றொருவர் மூலமாக அந்த வீட்டை அடமானம் வைக்க செய்கிறார் தயாளன். மேலும் தன்னுடைய மகனுடனான ரேணுகாவின் திருமணத்தையும் சதி செய்து நிறுத்துகிறார். இதனால் சாமியப்பன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடைகின்றனர்.
திருமணத்தை நிறுத்திய அனு: இதை தொடர்ந்து பிரபல மூத்த வழக்கறிஞரான பாஞ்சாலியின் மகள் அனுவை தன்னுடைய மகன் அர்ஜூனுக்கு மணமுடிக்க நிச்சயம் செய்கிறார். ஆனால் ரேணுகாவின் விவகாரம் அனுவிற்கு கடைசி நேரத்தில் தெரியவர, அந்த திருமணத்தை அனு நிறுத்துகிறார். இதனால் தயாளன் குடும்பத்தினர் அவமானப்படுகின்றனர். தொடர்ந்து சாமியப்பன் மற்றும் பாஞ்சாலி குடும்பத்தினரை பழிவாங்க தயாளன் மட்டுமின்றி அர்ஜூனும் களமிறங்குகிறார். ரேணுகா, அனு மற்றும் ஷண்முகம் மூவரும் நிலம் ஒன்றின் ரிஜிஸ்டிரேஷனுக்காக ஏற்காடு போகின்றனர். அவர்களை தொடர்ந்து செல்லும் அர்ஜூன், அனுவை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.
அர்ஜூனின் கொலை முயற்சி: தொடர்ந்து அடுத்தடுத்த முயற்சிகளில் ரேணுகா மற்றும் ஷண்முகத்தால் அனு தப்பித்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அனுவை அர்ஜூனின் ஆள் கத்தியால் குத்த வர, அதை தன்னுடைய கைகளால் பிடித்து தடுக்கிறார் ரேணுகா. தொடர்ந்து அங்குவரும் ஷண்முகம், அந்த அடியாளை அடித்து உதைத்து, கொலை முயற்சிக்கு காரணம் அர்ஜூன்தான் என்பதை தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து போலீசார் அர்ஜூனை சிறையில் அடைக்கின்றனர். முன்னதாக ஏற்காட்டின் ரம்மியமான சூழ்நிலையில் தன்னுடைய காதலை ரேணுகாவிடம் கூற ஷண்முகம் முயற்சிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











