Kizhakku Vaasal serial: திருமணத்தை நிறுத்திய அனு.. அடுத்த சதித்திட்டத்திற்கு தயாரான தயாளன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் இடம்பெற அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது கிழக்கு வாசல் தொடர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலின் பயணம் துவங்கிய நிலையில், இந்த பயணத்தில் பிரபல இயக்குநர் எஸ்ஏசி லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ந்து ரேஷ்மா, வெங்கட் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சீரியலில் ரேஷ்மா மற்றும் வெங்கட், ரேணுகா மற்றும் ஷண்முகம் என்ற கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இவர்கள்தான் ஜோடி சேர்வார்கள் என்பது தெரிந்துள்ள நிலையில் இவர்களின் கேரக்டர்களின் பெயர்களை இணைத்து RenSha என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர். ரேணுகாவை திருமணம் செய்யவிருந்த அர்ஜூன், பணத்திற்காக அந்த திருமணத்தை நிறுத்தினார். தயாளனின் சதித்திட்டமும் அர்ஜூனின் பேராசையும் இதற்கு பின்னால் இருந்தது. தொடர்ந்து இந்தக் கல்யாணத்திற்காக சாமியப்பன் வாங்கி கடனும் இந்த தொடரின் கதைக்களமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது அர்ஜூன் உடனான திருமணத்தை நிறுத்தியுள்ளார் அனு.

கிழக்கு வாசல் தொடர்: விஜய் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கிழக்கு வாசல் சீரியல் ரசிகர்களை கவர்ந்த போதிலும் தொடர்ந்து டிஆர்பியில் பின்தங்கியுள்ளது. இதையடுத்து இந்த சிரியலின் நேரம் மாற்றப்பட்டது. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியும் இந்த சிரியலின் நேர மாற்றத்திற்கு காரணமாக அமைந்த நிலையில், சேனலின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில் கிழக்கு வாசல் சீரியலுக்கு பிரைம் டைம் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த ஜோடி: இந்த சீரியலில் சாமியப்பனாக, இரண்டு மகன்களின் அப்பாவாக, ரேணுகாவின் வளர்ப்பு தந்தையாக நடித்து வருகிறார் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர். அவரது நடிப்பு இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அவரது வளர்ப்பு பெண்ணாக வரும் ரேணுகாவும் மற்றும் அவரது அத்தை மகனாக வரும் வெங்கட்டும் சீரியலின் அட்ராக்ஷனை மேலும் கூட்டி வருகின்றனர். ரேணுகாவின் மாமாவாக நடித்துள்ள தயாளன், தொடர்ந்து பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி, ரேணுகாவின் திருமணத்தையொட்டி சாமியப்பனை 20 லட்சத்திற்கு கடனாளி ஆக்குகிறார்.
திருமணத்தை நிறுத்திய அனு: மேலும் சாமியப்பனின் மூத்த மகன் வங்கியில் 6 லட்சத்தை திருடிய நிலையில் அந்தப் பணத்தையும் செட்டில் செய்கிறார். இதனிடையே, ரேணுகாவுடனான அர்ஜூனின் திருமணத்தை சதி செய்து நிறுத்திய தயாளன், பிரபல மூத்த வழக்கறிஞர் பாஞ்சாலியின் மகள் அனுவுடன் அர்ஜூன் திருமணத்தை திட்டமிடுகிறார். இந்த திருமணம் மணமேடை வரை வந்து தற்போது மணப்பெண் அனுவால் நிறுத்தப்பட்டுள்ளது. அர்ஜூனின் பேராசை குறித்து தெரிந்த அனு, இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
பழிவாங்க திட்டமிடும் தயாளன்: இந்நிலையில் சபையில் வைத்து தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அவமானப்படுத்திய சாமியப்பன் மற்றும் பாஞ்சாலி குடும்பத்தை தான் பழிவாங்க திட்டமிட்டுள்ளதாக தன்னுடைய மகன் அர்ஜூனிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது சதியில் 26 லட்சம் ரூபாயை வீட்டின்மீது கடன் வாங்கிவிட்டு தவித்துவரும் சாமியப்பன் அடுத்து தயாளனின் அடுத்த சதியில் எப்படி சிக்குவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனு -ஷண்முகத்தை கேவலமாக பேசிய அர்ஜூன்: இந்நிலையில் தயாளனின் அடுத்த எதிரியாக மாறியுள்ளார் பாஞ்சாலி. அவரின் மகள் அனு, அர்ஜூன் உடனான திருமணத்தை நிறுத்திய நிலையில் ஏமாற்றமும் அவமானமும் சேர, தயாளன் குடும்பத்தினர் மண்டபத்தை விட்டு வெளியேறியதை பார்க்க முடிந்தது. இதனால் கோபமடைந்த அர்ஜூனும் பயங்கர ஆத்திரத்துடன் வழியில் அனுவை பார்த்து அவரை கேவலமாக ஷண்முகத்துடன் இணைத்து பேசியதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் அனு, ரேணுகா மற்றும் ஷண்முகம் மூவரும் இணைந்து ஏற்காடு பயணம் செல்லவுள்ளது குறித்த பிரமோ வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











