Baakiyalakshmi: பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கும் பாக்கியா.. மாலினி வலையில் விழும் செழியன்!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துவரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வருகிறது.

கணவனை நம்பி தன்னைக் கூட்டுப்புழுவாக வைத்திருந்த பாக்கியா, அவரது பிரிவிற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் அடையும் ஏற்றங்களை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.

கடந்த எபிசோடில் ஈஸ்வரியை வீட்டை விட்டு போகும்படி ராதிகா கூறிய நிலையில், அவர் மனமுடைந்துப் போகிறார். இதையடுத்து கோபத்துடன் கோபியிடம் சவால் செய்கிறார் பாக்கியா.

Vijay TVs most favourite serial Baakiyalakshmi new episode makes fans more thrilling

மாலினியில் வலையில் விழும் செழியன்: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர் தொடர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்றுவரும் சூழலில், கடந்த வாரத்தின் Urban categoryயில் சன் டிவி சீரியல்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்தது. குறைவான கேரக்டர்களை கொண்டு நிறைவான எபிசோட்களை இயக்குநர் கொடுத்துவருவது இந்தத் தொடரின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

பெங்காலியில் புகழ்பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக உருவானபோதிலும் பாக்கியலட்சுமி தொடரில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான அம்சங்கள் காணப்படுகின்றன. அப்பாவியாக தன்னை கூட்டுப்புழுவாக நினைத்து வீட்டிலுள்ளவர்களின் தேவைகளுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்துவந்த பாக்கியாவிற்கு அவருடைய கணவர், கோபி மற்றும் ராதிகா இடையிலான உறவு குறித்து தெரியவரும்போது நடக்கும் சம்பவங்களை இந்தத் தொடர் சிறப்பாக கொடுத்தது.

தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை தானே முன்வந்து கொடுத்த பாக்கியா, அடுத்தடுத்து தன்னுடைய முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் சிறப்பாக செயல்பட்டுவருவது பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் தன்னுடைய மாமியாரிடம் பாக்கியா பம்மும் இடங்களில் ரசிகர்களை எரிச்சலுக்குள்ளாக்கவும் அவர் தவறுவதில்லை. சொல்லுங்க அத்த.. நான் என்ன செய்றது அத்த, போன்ற அவருடைய டயலாக்குகள் ரசிகர்களுக்கு சில சமயங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

தற்போது பாக்கியா வீட்டோடு, கோபி, ராதிகா மற்றும் மயூ என டேரா போட்டுள்ள நிலையில், இவர்களது இருப்பு ஈஸ்வரிக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மகன் மட்டும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இந்நிலையில், ராதிகாவிற்கும் ஈஸ்வரிக்கும் தொடர்ந்து மனஸ்தாபங்கள், சண்டைகள் ஏற்படுகின்றன. இதனால் கோபியும் நிம்மதி இல்லாமல் காணப்படுகிறார்.

இந்நிலையில் சில எபிசோட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், இது தன்னுடைய கணவன் வீடு என்றும் விருப்பம் இல்லாவிட்டால் ஈஸ்வரி வெளியில் செல்லலாம் என்றும் கூறும் ராதிகா, வயதுக்கான மரியாதையை கொடுக்காமல் ஒருமையில் பேசுகிறார். இதனால் ஈஸ்வரி மனமுடைந்து போகிறார். அவரது இந்த நிலையை பார்க்கும் பாக்கியா, ராதிகாவிடம் சண்டைக்கு போகிறார். தொடர்ந்து அவருக்கு பரிந்து பேசும் கோபியிடமும் கோபத்துடன் பேசுகிறார்.

கோபியோ பாக்கியா 2 லட்சம்தான் கொடுத்துள்ளதாகவும் இன்னும் மீதமுள்ள 18 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்றும் பேச, உடனடியாக கோபத்துடன் பாக்கியா, மீதமுள்ள 18 லட்சத்தை இன்னும் ஒரு மாதத்திற்குள் கொடுப்பதாக சவால் விடுகிறார். அதற்கான முன்னெடுப்புகளிலும் அவர் ஈடுபடுகிறார். முன்னதாக தான் பழனிச்சாமியிடம் வேண்டாம் என்று மறுத்த பெரிய அளவிலான சமையல் கான்டிராக்டை கையிலெடுக்கிறார்.

இந்நிலையில், பாக்கியாவின் மூத்த மகன் செழியனும் மற்றொரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். திருமணமானவர் என்று தெரிந்தும் செழியனை தன்னுடைய வலையில் விழ வைக்க முயற்சிக்கிறார் அவரது க்ளையண்ட் மாலினி. அவரை தவிர்க்க முடியாமல் தவிக்கும் செழியன், அவரது மயக்கும் வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறார். மாலினி மீதான அனுதாபம், தற்போது அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. இவர்களின் உறவு ஜெனிக்கு எத்தகைய பாதிப்பை கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X