நீயா நானா பிரமோ.. அது வயிறா இல்லை முட்டை குடோனா?.. கோபிநாத்துக்கே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு!

சென்னை: விஜய்டிவியின் பிக்பாஸ் கொண்டாட்டங்கள் ஒருபுறம் ஜரூராக நடந்துக் கொண்டிருக்க மற்ற நிகழ்ச்சிகளும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்றவகையில் தங்களது நிகழ்ச்சிகளை ரசிகர்களை பார்கக வைக்கும்வகையில் அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்வுகளுடன் களமிறங்க காத்திருக்கின்றன.

அந்த வகையில் 10 ஆண்டுகளை கடந்து விஜய்டிவியின் பேர் சொல்லும் நிகழ்ச்சியாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நீயா நானா ஷோவின் இந்தவார நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டும்வகையிலான டாப்பிக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த வார தலைப்பையும் அதன் பிரமோவையும் பார்த்த ரசிகர்கள் தலைசுற்றித்தான் போனார்கள். ஏனென்றால் ஆங்கர் கோபிநாத்தே தலைசுற்றித்தான் போனார்.

Vijay TV s Neeya naana show 5th october episode promo

விஜய் டிவி நிகழ்ச்சிகள்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நாளைய தினம் தன்னுடைய 8வது சீசனை மிகச்சிறப்பாக கொண்டாட உள்ளது. இதற்கான அதிரடி பிரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாளை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் 8 நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இதன் புதிய ஆங்கராக, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று கூறிக்கொண்டே களமிறங்கவுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சியின் பக்கம்தான் அனைத்து ரசிகர்களின் கவனமும் உள்ளது. ஆனாலும் விஜய் டிவியில் தொடர்ந்து பல வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் மற்ற நிகழ்ச்சிகளும் ரசிகர்களை கவரும்வகையிலேயே அமைந்துள்ளன.

நீயா நானா ஷோ: இதன் பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்க செய்துள்ளன. அந்த வகையில் 10 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டுவரும் விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவான நீயா நானா ஷோவும் இந்த வாரம் வித்தியாசமான தலைப்புடனேயே ரசிகர்களை கவர காத்திருக்கிறது. இந்த வாரம் சாப்பாட்டு போட்டி வீரர்கள் மற்றும் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியை ஆங்கர் கோபிநாத் வழிநடத்தவுள்ளார். இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் ரசிகர்களை கவரும்வகையில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் ஆங்கர் கோபிநாத் தலைசுற்றிப்போனதை பார்க்க முடிந்தது.

முட்டை சாப்பிடும் போட்டி: நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப முட்டை சாப்பிடும் போட்டியை கோபிநாத் அரங்கேற்ற, ஒருவர் வந்து 10 முட்டைகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவேன் என்று சவால் விடுகிறார். ஆனால் அவரோ, போட்டியின் வீரியத்தை உணராமல் மிகவும் மெதுவாக முட்டையை உள்ளே தள்ள, அவருக்கு கைக்கொடுக்கும்வகையில் கோபிநாத்தும் ஒரு முட்டையை உள்ளே இறக்குகிறார். இவருக்கு புரட்டாசி மாதம் இல்லையா என்றவகையில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்க, முட்டை சாப்பிடுபவர் மெதுவாக சாப்பிட்டு கோபிநாத்தின் பொறுமையை சோதிக்கிறார். இதையடுத்து போட்டிக்கு தயாராக இருந்த அடுத்த நபரை கோபிநாத் கூப்பிடுகிறார்.


முட்டைகளை வயிற்றில் அடுக்கிய போட்டியாளர்: அவரோ, இதற்காகவே காத்திருந்தது போல, வாய்க்கும் கைக்கும் அடுத்தடுத்து வேலை கொடுத்து முட்டைகளை உள்ளே இறக்குகிறார். அவரது வேகத்தை பார்த்து பொறுமையாக சாப்பிடுங்கள், எனக்கு பயமாக இருக்கிறது என்று கோபிநாத் கூறிய நிலையிலும் அவர் விடாமல் முட்டைகளை உள்ளே தள்ளுகிறார். போதும் என்று கோபிநாத் சொன்ன நிலையிலும் முன்னவர் 15 முட்டைகளை சாப்பிடுவேன் என்று கூறியதை பிரேக் செய்யும்வகையில் இவர் 16 முட்டைகளை முடிக்கிறார்.

முட்டை குடோனா?: அது என்ன வயிறா அல்லது முட்டை குடோனா என்ற அதிர்ச்சியிலிருந்து கோபிநாத் மீளாமல் அவரையே பார்த்ததை இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது. இதை பார்த்த மற்றொரு போட்டியாளர், தான் போட்டியிலேயே கலந்துக் கொள்ளவில்லை என்று கூறுவதாக இந்த பிரமோ மிகவும் கலகலப்பாக காணப்படுகிறது. நாளை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X