Neeya naana show: சண்முகம் சார் பொண்ணை சூப்பரா வளர்த்திருக்கீங்க.. சர்ட்டிபிகேட் கொடுத்த கோபிநாத்!
சென்னை: விஜய் டிவியின் டாக் ஷோவான நீயா நானா ஷோ, பல ஆண்டுகளை கடந்தும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நீயா நானா ஷோவை முந்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த சிறப்பிற்கு நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத்தான் காரணமாக அமைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே நிகழ்ச்சியின் ஆங்கராக செய்லபட்டு வருகிறார் கோபிநாத். வாரந்தோறும் சிறப்பான டாபிக்கை எடுத்துக் கொண்டு, அதன் இருதரப்பு நியாயங்களை கொடுத்துவரும் இந்த நிகழ்ச்சியில் நாட்டாமையாக செயல்பட்டு தீர்ப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார் கோபிநாத். இருதரப்பு நியாயங்களை பேசும் பங்கேற்பாளர்கள் மனம் கோணாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது நீயா நானா நிகழ்ச்சி. வாரந்தோறும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் மிகவும் வித்தியாசமான தலைப்புகளில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சமையல் முதல் சர்வதேச அரசியல் வரை இந்த நிகழ்ச்சி பேசாத தலைப்பே இல்லை என்று கூறலாம். ஆனாலும் தொடர்ந்து இவர்களுக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்து ஐடியாக்கள் கிடைக்கிறதோ என்று ரசிகர்கள் கேட்கும்வகையில் சிறப்பான தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பாக ஆங்கர் கோபிநாத் பார்க்கப்படுகிறார்.
ஆங்கர் கோபிநாத்: ஒவ்வொரு வாரமும் இந்த விவாத நிகழ்ச்சியின் சாராம்சம் குறையாமல் பார்த்துக் கொண்டு வருகிறார் கோபிநாத். ஒவ்வொரு வாரமும் பேசும் இருதரப்பினரை அவர்களின் விவாதம் சற்றும் மெருகு குறையாதவகையில் பார்த்துக் கொள்கிறார் கோபிநாத். இதன்மூலம் இந்த நிகழ்ச்சியை சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டு வருகிறார். கோட் சூட் போட்டுக் கொண்டு அவர் கம்பீரமாக இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் அழகிற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் சர்வதேச அளவில் காணப்படுகின்றனர். இந்த வாரமும் சிறப்பான தலைப்புடனேயே நீயா நானா ஷோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இளம்பெண்ணின் கண்ணீர்: இன்றைய தினம் தனியாளாய் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் இளம்பெண் ஒருவர், தன்னுடைய தந்தைக்கு பிறகு வீட்டை நிர்வகிக்கும் நிலையில், பள்ளிகளில் டீச்சராகவும் கெஸ்ட் லெக்சரராகவும் ஆன்லைன் கிளாஸ், டியூஷன் என பம்பரமாக சுழன்று வருகிறார். ஒருநாளாவது தன்னுடைய பிரச்சினைகள் அனைத்தையும் விலக்கிவிட்டு நிம்மதியாக தூங்க வேண்டும என்று தான் விரும்புவதாகவும் ஆனால் ஒருநாளும் தன்னால் அப்படி தூங்க முடிவதில்லை என்றும் தன்னுடைய அப்பாவின் நிலையிலிருந்து தான் யோசித்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கோபிநாத் பாராட்டு: இதையடுத்து பேசிய கோபிநாத், அப்பாவின் மனநிலையில் எதையுமே பார்க்க வேண்டாம் என்றும் அப்பா சொல்லிக் கொடுத்ததை மட்டுமே வைத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் யோசிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பெண்ணிற்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவருடைய அப்பா சண்முகம் அவரை மிகச்சிறப்பாக வளர்த்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதைகேட்டு நெகிழ்ந்த அந்த இளம்பெண், தன்னுடைய அப்பாவிற்கு நல்ல பெயரை வாங்கித்தர வேண்டும என்று தான் நினைத்ததாகவும் கோபிநாத் வாயால் அதை கூறியதைவிட அப்பாவிற்கு வேறு கிப்ட் இருக்க முடியாது என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











