Neeya naana show: இளைய தலைமுறையை ஆக்கிரமிக்கும் கொரிய மோகம்.. இந்த வார நீயா நானாவில் சுவாரஸ்யம்!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ஷோவில் அடுத்தடுத்த வாரங்களில் சுவாரஸ்யமான தலைப்புகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியின் ஆங்கராக தொடர்ந்து பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வருகிறார் கோபிநாத். இந்த வாரத்திற்கான எபிசோடும் வித்தியாசமான தலைப்புடன் காணப்பட்டது. இதற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.

வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் விஜய் டிவியில் நீயா நானா ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோ இல்லாமல் ஞாயிறுகளை கழிக்கும் குடும்பங்கள் குறைவு என்று கூறும்வகையில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது நீயா நானா ஷோ.

Television Neeya naana show Vijay tv

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது. நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக் கொண்டு அதில் இருதரப்பு நியாயங்களை சிறப்பாக கொடுத்து வருகிறார் ஆங்கர் கோபிநாத். அவரது தொகுப்பும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியமான மற்றும் முதல் காரணமாக அமைந்து வருகிறது. கோட் சூட் போட்டுக்கொண்டு கம்பீரமாக நடைபயின்றபடி நிகழ்ச்சியை தொகுத்துவரும் கோபிநாத் சில நேரங்களில் நெகிழ்ச்சிக்குள்ளாகி ரசிகர்களை கவர்ந்து வருவதும் நடந்து வருகிறது.

இந்த வார ஷோவின் ப்ரமோ: ஒவ்வொரு வாரமும் சிறப்பான தலைப்புகளுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அணுகிவருகிறது. எங்கிருந்துதான் இவ்வளவு தலைப்புகளை யோசிப்பார்களோ என்று கேள்வி எழுப்பும் வகையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பான தலைப்புகளுடனே ரசிகர்களை இந்த நிகழ்ச்சி சந்திக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான தலைப்புடனேயே நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொரியன் கலாச்சாரத்தை கொண்டாடுபவர்கள் மற்றும் அதன் தாக்கத்தை விமர்சிப்பவர்கள் என இருவேறு தரப்பினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

கொரிய மோகம் நல்லதா?: இளைய தலைமுறையினரை ஆக்கிரமிக்கும் கொரிய மோகம் வரவேற்பிற்கு உரியதா என்று இந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. கொரிய கலாச்சாரத்தில் மரியாதை செலுத்தியவருக்கு கோபிநாத்தும் பதில் மரியாதை செய்தார். கொரியன் கலாச்சாரத்தை இளைய தலைமுறையினரை ஈர்க்கும் விஷயங்களையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பட்டியலிட்டனர். அவர்களின் ஸ்கின்கேர், உணவு, அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸ் என தங்களை கவர்ந்த விஷயங்களை பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்தனர். கொரிய பாடல்களையும் அவர்கள் பாடினர். நிகழ்ச்சி உற்சாகமாக காணப்பட்டது.

சுவாரஸ்யமான ஷோ: வாரந்தோறும் இந்த நிகழ்ச்சியில் இருவேறு கருத்துக்களை கொண்டவர்கள் பங்கேற்று தங்கள் தரப்பு நியாயங்களை பேசிவரும் சூழலில், இந்த வாரமும் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று இந்த பிரமோவை பார்க்கும்போது தெரியவருகிறது. இதன் அடுத்தடுத்த ப்ரமோக்களையும் தொடர்ந்து விஜய் டிவி வெளியிடும். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை இந்த பிரமோக்கள் மேலும் அதிகரிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X