Neeya naana: 5 லட்சம் சம்பளத்துக்கு இருமடங்கு வேலை வாங்குவார்கள்.. நீயா நானா ஷோவில் ஐடி ஊழியர்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பல ஆண்டுகளைக் கடந்து மாஸ் காட்டி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் முக்கியமானது ஆங்கர் கோபிநாத். இந்த நிகழ்ச்சி துவக்கத்திலிருந்து அவர் தன்னுடைய சிறப்பான ஆங்கரிங்கால் நிகழ்ச்சியை சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி அடுத்தடுத்து முக்கியமான விவாதங்களை கொடுத்து வருகிறது. நாட்டிற்கு அவசியமான விஷயங்களில் இருந்து உணவு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்களையும் இந்த நிகழ்ச்சி தனக்கான விவாதங்களாக எடுத்துக் கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான மற்றும் ஏராளமானவர்களின் ஆதங்கமாக உள்ள ஒரு விஷயத்தை தான் விவாதத்திற்கான பொருளாக கோபிநாத் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் ஐடி வேலையில் இருக்கும் பிரஷரை பொறுத்துக் கொள்ள முடியாமல் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து வெளியில் வந்து சொந்த தொழில் துவங்கியவர்கள் மற்றும் ஐடி வேலையில் மற்ற வேலைகளை போலத்தான் அழுத்தம் இருக்கும் என்று கூறுபவர்கள் என இருதரப்பினரை பேச வைத்து அழகு பார்த்தார் கோபிநாத். சில நேரங்களில் பங்கேற்பாளர்களின் பல விவாதங்களை அவர் இடைமறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சேனலில் நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சீரியல்களும் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. அந்த வகையில் இந்த சேனலின் முக்கியமான விவாத நிகழ்ச்சியாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது நீயா நானா. இந்த ஷோவில் விவாதத்திற்கு எடுக்கப்படாத விஷயங்களே இல்லை என்னும் அளவிற்கு சின்ன விஷயத்திலிருந்து மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயங்கள் வரை நிகழ்ச்சியின் கருப்பொருளாக அமைந்து வருகின்றன. நிகழ்ச்சியின் முக்கியமான விஷயமாக தொகுப்பாளர் கோபிநாத் காணப்படுகிறார்.
ஆங்கர் கோபிநாத்: இந்த நிகழ்ச்சி துவக்கத்திலிருந்து கோபிநாத் நிகழ்ச்சியோடு இணைந்த தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். நீயா நானா கோபிநாத் என்று அடைமொழியோடு கூறும் அளவிற்கு இவர் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு வாரமும் முக்கியமான பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் சர்வதேச அளவில் விவாதத்திற்குரிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான ஐடி வேலை குறித்தும் அது தரும் பிரஷரில் இருந்து தப்பிப்பதற்காக பல லட்சங்கள் சம்பளத்தை விட்டு விட்டு வெளியில் வருபவர்கள் குறித்தும் விவாதத்திற்கு இந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்கள் ஆதங்கம்: வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீயா நானா நிகழ்ச்சி இல்லாத வீடுகளே இருக்க முடியாது என்ற அளவிற்கு நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களிடையே ஒன்றி காணப்படுகிறது. அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் இரு தரப்பினர் தங்களது நியாயங்களை எடுத்து கூறியுள்ளனர். ஐடி வேலைகளில் லட்சங்களில் சம்பளங்கள் வாங்கிய போதிலும் அந்த வேலை கொடுக்கும் பிரஷரில் இருந்து தப்பிப்பதற்காக அதிலிருந்து விலகி விவசாயம், தீவன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சுய தொழில்களை மேற்கொண்டு வருபவர்களின் சக்சஸ் ஸ்டோரிகள் இந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளன.
ரூ.25 லட்சம் சம்பளத்தை உதறிய ஊழியர்: ஒரு பெண்மணி ஐடி தொழில் மூலம் தான் பத்து லட்சம் மாதத்திற்கு சம்பாதிப்பதாகவும் தன்னுடைய கணவர் அதற்கும் மேலே சம்பாதித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த இந்த வேலை தங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை கொடுத்ததாகவும் அதனால் 25 லட்சம் மாதத்திற்கு சம்பளம் கிடைத்த வேலையை விட்டுவிட்டு தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தது கேட்பவர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க செய்தது. இந்நிலையில் மற்றொரு நபர் பேசும்போது தங்களுக்கு 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டால் தங்களிடமிருந்து அதை 10 லட்சம் வேலையாக திரும்ப வாங்கும் வரையில் ஐடி நிறுவனங்கள் தங்களை விட்டு வைக்காது என்று உண்மையை உரக்க சொன்னார்.
மாற்று தொழில்களில் சாதனை: இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது சூழல்களை தெரிவித்த நிலையில் மற்றொரு நபர் தான் ஐடி வேலையை விட்டுவிட்டு தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார். இதனிடையே இவர்களை எதிர்த்தும் ஒரு தரப்பினர் பேசியதை பார்க்க முடிந்தது. எல்லா நிறுவனங்களும் ஊழியர்களுக்கு எப்போதும் பிரஷரை கொடுப்பதில்லை என்றும் விளையாட்டுப் போக்கில் வேலையை பார்க்கும் சூழல்கள் ஐடி துறையிலும் காணப்படுவதாகவும் ஒரு பெண்மணி குறிப்பிட்டு இருந்தார். தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக ஐடி துறையில் முன்னேறி பெரிய அளவில் தற்போது உள்ளதையும் ஒரு நபர் சுட்டிக்காட்டினார்.
ஐடி வேலைகள் கொடுக்கும் பிரஷர்: இதனிடையே இவர்கள் அனைவரும் பிரஷருடன் தான் வேலை செய்வதாகவும் நிகழ்ச்சிக்காக ஐடி துறையை உயர்த்தி பேசுவதாகவும் எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியில் சென்றால் ஐடி துறை தங்களுக்கு கொடுக்கும் நோய் உள்ளிட்ட பாதிப்புகளை அவர்கள் வெளிப்படையாக பேசுவார்கள் என்றும் தெரிவித்தனர். இவ்வாறாக இந்த வார நிகழ்ச்சி சுவாரசியத்துடன் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











