Neeya naana show: மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்த வந்துட்டாங்க.. 10 ஆண்டுகள் காதலித்து கைகோர்த்த ஜோடிகள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் நீயா நானா ஷோவின் இந்த வார விவாதத்திற்கான டைட்டிலும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த ஷோவில் 10 ஆண்டுகள் காதலித்து மணந்து கொண்ட ஜோடிகளை பார்த்து தற்போதைய 2K தலைமுறையினர் வியப்பை வெளிப்படுத்துவதாக காணப்பட்டது.
இதில் பல நெகிழ்ச்சியான காதல் கதைகளை பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தினர். ஒரு பெண்ணின் வீட்டில் அவருடைய காதலுக்கு மறுப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினர் சாலையிலேயே 5 லிட்டர் மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்த வந்ததாகவும் ஆனால் தன்னுடைய காதலில் அந்தப் பெண் மிகவும் உறுதியாக இருந்ததாகவும் அவரது கணவர் மிகவும் பெருமையாக கூறியதை பார்க்க முடிந்தது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது நீயா நானா ஷோ. இந்த ஷோவின் துவக்கம் முதலே ஆங்கராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கோபிநாத். கோபிநாத்தையும் நீயா நானா ஷோவையும் பிரிக்க முடியாது என்பதாக இரண்டும் ஒன்றில் ஒன்று அங்கமாக மாறியுள்ளது. இந்த ஷோ தொடாத விஷயங்களே இல்லை எண்ணும்விதமாக உள்ளுர் நிகழ்வுகள் முதல் சர்வதேச நடைமுறைகள் வரை அனைத்து விஷயங்களும் இந்த நிகழ்ச்சியில் விவாதங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஷோவில் பங்கேற்கும் இரு தரப்பினரையும் அழகாக அரவணைத்து விவாதங்களை சுவாரஸ்யமாக்கி வருகிறார் கோபிநாத்.
இந்த வார நீயா நானா: அந்த வகையில் இந்த வார ஷோவும் சிறப்பான மற்றும் வித்தியாசமான தலைப்புடனேயே காணப்பட்டது. பத்து வருடங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் மற்றும் அவர்களை பார்த்து வியக்கும் 2K தலைமுறையினர் என்பதாக இந்த வார எபிசோட் காணப்பட்டது. நாளை பகல் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் பிரமோக்களை விஜய் டிவி அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதில் நெகிழ வைக்கும் காதல் கதைகளை பார்க்க முடிந்தது. வழக்கம்போல இந்த நெகிழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கோபிநாத் கடத்தினார். 10 ஆண்டுகள் ஒருவரையொருவர் காதலிக்க முடியுமா என்று இளந்தலைமுறையினர் தங்களது வியப்பையும் அடுத்தடுத்து வெளிப்படுத்தினர்.
கபடியா காதலா?: கபடியா காதலா என்ற சூழல் வந்ததாகவும் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டருடன் பெண்ணின் வீட்டிற்கு சென்றதாகவும் ஒருவர் பெருமையுடன் கூறினார். இதேபோல தன்னுடைய குடும்பத்தினர் மொத்தத்திற்கும் தான் செல்லப்பிள்ளை என்றும் அதையும் மீறி தன்னுடைய வாழ்க்கையை தான் தேர்ந்தெடுத்ததாகவும் மற்றொரு பெண் கூறினார். இதனிடையே, தன்னை காதலித்ததற்காக தன்னுடைய மனைவியை 5 லிட்டர் மண்ணெண்ணையை கொண்டு அவரது குடும்பத்தினர் கொளுத்த வந்ததையும் ஆனாலும் அவர் உறுதியாக இருந்ததையும் ஒருவர் பெருமிதமாக குறிப்பிட்டார்.

ஆச்சர்யத்தில் இளைய தலைமுறை: ஆனால் இதை கேட்ட 2K பெண் ஒருவர், தானாக இருந்திருந்தால் அந்த இடத்தில் தன்னுடைய அப்பா -அம்மா பேச்சை கேட்டு போயிருப்பேன் என்றும் உயிர் போயிடும் என்றும் குறிப்பிட்டார். அவர்கள் தங்களின் காதலுக்காக நின்றது ஆச்சர்யப்படுத்துவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, தன்னுடைய அப்பா மண்ணெண்ணை ஊற்ற வந்தபோதும் காதல்தான் பெரிது என்று நின்ற அந்த பெண்மணி, தன்னுடைய மகள் தன்னுடைய கேரியரை சரியாக செலக்ட் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதையும் கோபிநாத் கேள்வி எழுப்ப தவறவில்லை. மொத்தத்தில் சுவாரஸ்யங்களின் அணிவகுப்பாய் இந்த வார ஷோ காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











