Neeya Naana show: நடனமாடும் மனைவிகள்.. போட்டோ எடுக்கும் கணவன்கள்.. நீயா நானாவில் சுவாரஸ்யம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களிடையே தொடர்ந்து பல வருடங்களாக மாஸ் காட்டிவரும் விவாத நிகழ்ச்சி நீயா நானா.

இந்த நிகழ்ச்சியின் ஒரே ஆங்கராக தொடர்ந்து இருந்துவரும் கோபிநாத்தும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

Vijay TVs Neeya Naana show this week promo makes everyone Interesting

ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யம் நிறைந்த தலைப்புகளுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் இந்த நிகழ்ச்சி இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன்தான் களமிறங்கியுள்ளது.

வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கிய நீயா நானா ஷோ: விஜய் டிவியின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் ஒரேயொரு விவாத நிகழ்ச்சியாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது நீயா நானா. இந்தத் தொடரின் மற்றொரு சுவாரஸ்யம் என்றால் அது நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத். ஏறக்குறைய நிகழ்ச்சி துவத்திலிருந்து இவர்தான் இந்த நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்து வருகிறார். அந்த வகையில் இதுவரை ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். நிகழ்ச்சியின் இருதரப்பு போட்டியாளர்களை பக்குவமாக கையாளும் வித்தை கோபிநாத்திற்கு கைவந்த கலையாக உள்ளது.

மேலும் சிரிப்புடனேயே இரு தரப்பு வாதிகளையும் பேசவிட்டு, அவர்களின் ஆசைகளை, லட்சியங்களை, குமுறல்களை வெளிக்கொண்டு வருவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கோபிநாத். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது நீயா நானா ஷோ. இறுதியில் இருதரப்பினரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்தான் இதன் நிறைவை செய்து வருகிறார் கோபிநாத். அந்த வகையில் இந்த வாரமும் டான்ஸ் ஆட சொல்லும் மனைவிமார்கள் மற்றும் அதை மறுக்கும் கணவர்களும் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை அணுகியுள்ளார் கோபிநாத்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தங்களது சந்தோஷத்தை நடனம் மூலம் வெளிப்படுத்துவதில் என்ன தவறு என்று மனைவிமார்கள் கேள்வி எழுப்ப, இதுதான் சந்தோஷமா என்று அவர்களை கேள்வி கேட்கிறார்கள் கணவர்கள்.

மேலும் நிகழ்ச்சியில் மனைவிகளில் சிலர் தனுஷ் படத்தின் பிஜிஎம்மிற்கு குஷியாக நடனமாடுகின்றனர். அவர்கள் நடனமாடும்போது அவர்களது கணவர்கள் அவர்களை புகைப்படமும் வீடியோவும் எடுக்க, கோபிநாத் இதற்கு சிறப்பான கமெண்ட்டை கொடுக்கிறார். பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் மனைவிகள் உற்சாக டான்ஸ் ஆடும்போது பெரும்பாலும் கணவர்கள் போட்டோதான் எடுக்கிறார்கள் என்று அவர் நகைச்சுவையுடன் இந்த நிகழ்வு குறித்து கூறுவதாக நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. அதைக்கேட்டு பங்கேற்பார்கள் அனைவரும் சிரிப்பதாகவும் காணப்படுகிறது.

Vijay TVs Neeya Naana show this week promo makes everyone Interesting

தன்னுடைய மனைவி நடனம் ஆடும்போது அதை பெரும்பாலும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஏற்பதில்லை அல்லது அனுமதிப்பதில்லை. இதன்மூலம் தங்களுக்கு மேலும் மனைவிகள் ப்ரஷரை ஏற்றிவிடுவதை சுட்டிக் காட்டுகிறார் ஒரு நபர். இது ஒரு பிரச்சினையாக மாறுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சில ஜோடிகளை நடனமாடவிட்டு அவர்களுக்கு மதிப்பெண்களையும் கொடுக்கிறார் கோபிநாத்.

Vijay TVs Neeya Naana show this week promo makes everyone Interesting

இதனிடையே ஆடத் தெரியாத அல்லது ஆட கூச்சப்படும் கணவர்களை ஏன் வம்படியாக நடனமாட அழைக்கிறீர்கள் என்று கோபிநாத் கேள்வி எழுப்புகிறார். இதற்கு நேரடியாக பதிலளிக்காத அந்தப் பெண், சும்மா ரீல்சுக்காக ஒரு நிமிடம் ஆடவே தான் அழைப்பதாக கூறுகிறார். இவ்வாறு சுவாரஸ்யமான விவாதங்களுடன் இந்த வார நிகழ்ச்சி காணப்படுகிறது. எப்போதுமே சீரியசான டாப்பிக்குகளை கொண்டுவந்து, அதில் லைட்டான விஷயங்களை சேர்ப்பார் கோபிநாத். ஆனால் இந்த வாரம் லைட்டான டாப்பிக்குடனேயே அவர் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X