என்னோட Achievement என்னோட ஃபேமிலிதான்.. வேலைக்கு நோ சொல்லும் படித்த பெண்கள்.. இந்த வார நீயா நானா ஷோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக நீயா நானா ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த ஷோவின் மறுக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளார் கோபிநாத். இந்நிலையில் இந்த வார நீயா நானா ஷோவின் டாப்பிக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நான் மிகவும் அதிகமாக படித்துள்ளேன். ஆனால் படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும்தானே தவிர,வேலைக்கு போவதற்கோ, சம்பாதிப்பதற்காகவோ அல்ல என்று போட்டியாளர் ஒருவர் பிரமோவில் தன் பக்க நியாயத்தை கூறும் நிலையில், இந்த வார டாபிக் மட்டுமில்லாமல் ஷோவும் சிறப்பாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

neeya naana show gopinath


நீயா நானா ஷோ: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி டாக் ஷோவாக நீயா நானா பல ஆண்டுகளை கடந்து இருந்து வருகிறது. இந்த ஷோவில் மிகப்பெரிய பலமாக ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். இவரது பிரசன்ஸ் இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பல்வேறு உத்வேங்களை கொடுதது வருகிறது. இந்த ஷோவின் மூலம் விவரிக்கப்படாத பல பக்கங்களை பேசி வருகிறார் கோபிநாத். ஓ இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அனைத்து தரப்பினரையும் யோசிக்க வைத்து வருகிறார். இருவேறு கருத்துக்களை கொண்ட இருதரப்பினருக்கு பாலமாக அமைந்து அவர்களிடம் இருந்து கருத்துக்களை வாங்குகிறார் கோபிநாத்.

சுவாரஸ்யமான தலைப்பு: இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார தலைப்புமே மிகப் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த வார தலைப்பும் மிகச்சிறப்பாக பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும்வகையில் அமைந்திருந்தது. தான் ஹோம் மேக்கராக இருக்கவே விரும்புவதாக கூறும் படித்த பெண்கள் மற்றும் அவர்களது முடிவு சரியானதல்ல என்று எதிர்க்கும் பெண்கள் என இருவேறு கருத்துக்களை கொண்டவர்களை தன்னுடைய நடுநிலையான குணத்துடன் அணுகினார் கோபிநாத். தற்போது இந்த நிகழ்ச்சியின் பிரமோக்கள் வெளியாகிவரும் நிலையில், படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டும்தான் என்று ஒரு பெண் இந்த பிரமோவில் கூறியுள்ளார்.


பகுத்தறிவுதான் கல்வி: படிப்பு என்பது வேலைக்கு போவதற்கோ அல்லது சம்பாதிப்பதற்கோ அல்ல என்பது அவரது வாதம். இதை எதிர்த்து பேசிய எதிர்தரப்பு பெண், நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் மட்டும்தான் இருப்பேன் என்றால் நான் படிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அவர் கூற, பயன் மட்டும் கல்வி கிடையாது என்றும் பகுத்தறிவும்தான் கல்வி என்று முதல் தரப்பில் மற்றொரு பெண் அதிரடியாக பேசுகிறார். படிப்பு என்பது மிகப்பெரிய ஆயுதம் என்றும் இதன்மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்றும் மீண்டும் எதிர்தரப்பு பேசுகிறது. இதற்கு பதிலளிக்கும் மற்றொறரு பெண், தன்னுடைய Achievement என்பது தன்னுடைய குடும்பம்தான் என்று தான் எப்போதுமே சொல்வேன் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.

இரட்டை சவாரி செய்யும் பெண்கள்: பெண்கள் சில தலைமுறைகளாகவே படிப்பை அதிகளவில் பெற்று வருகின்றனர். அதிகமான பெண்கள் படித்திருந்தாலும் திருமணம், குழந்தைகள், பேமிலி எனஅடுத்தடுத்த விஷயங்களுக்காக வேலைக்கு செல்லமல் வீட்டிலேயே இருக்கின்றனர். அவர்கள் இதை தங்களுக்கு சந்தோஷமான விஷயமாகவே கொள்கின்றனர். தங்களுடைய சாதனை குடுமபம்தான் என்று நீயா நானா ஷோவில் ஒரு பெண் கூறும் நிலையில், அதை அதிகமான பெண்களின் குரலாக பார்க்க முடிகிறது. குடும்பம், வேலை என இரட்டை சவாரி செய்துவரும் பெண்களின் மத்தியில் இவர்களின் கருத்தும் யோசிக்க வேண்டியதாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X