Neeya Naana show: அப்பாவை அடித்த மகன்.. கோபிநாத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய போட்டியாளர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா விவாத நிகழ்ச்சி பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் துவக்கம் தொட்டே ஆங்கராக இருந்துவரும் கோபிநாத் தன்னுடைய சிறப்பான பேச்சின்மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார்.

ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு இருதரப்பு நியாயங்கள் இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக அமைந்துள்ளது.
நீயா நானா ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளின் ஒன்றாக 10 ஆண்டுளை கடந்து வெற்றிநடைப் போட்டு வருகிறது நீயா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்றால் இத்தனை ஆண்டு காலமும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து வெற்றிகரமாக ஆங்கராக நடைபோட்டு வருகிறார் கோபிநாத். இந்த நிகழ்ச்சி அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. கோபியை தவிர்த்து வேறு யாரும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்றுவிட முடியாது என்ற கமெண்ட்ஸ்களை கோபி பெற்றுள்ளார்.
இரு தரப்பு நியாயங்கள்: ஒரு டாப்பிக்கை எடுத்துக் கொண்டு அதன் இருதரப்பு நியாயங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது. நிகழ்ச்சியில் இருதரப்பு போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது நியாயங்களை பதிவு செய்துவருகின்றனர். அவர்கள் தரப்பு நியாயத்தை மிகச்சிறப்பாக வெளிகாட்ட அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் கோபி. கடந்த பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியில் சிறப்பான பல விவாதங்கள் நடந்துள்ளன.
சிறப்பான விவாதக்களம்: இந்த வாரமும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பான டாப்பிக் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான இளம் தலைமுறைகளின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் சூழ்நிலைகளை இந்த வார நீயா நானா நிகழ்ச்சி விவாதித்துள்ளது. சண்டை சச்சரவுகளில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் இந்த வார நிகழ்ச்சி விவாதத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட காரணமான சூழ்நிலைகளை இளைஞர்கள் வெளிப்படுத்தினர்.
அப்பாவை அடித்த மகன்: தன்னை பள்ளிக்கு செல்ல வற்புறுத்திய தன்னுடைய அப்பாவைத்தான் தான் முதலில் அடித்ததாக ஒரு இளைஞர் கூறிய நிலையில், அதை கேட்டு கோபிநாத் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு பள்ளிக்கு செல்ல தோணாமல் தான் தான் வேலைக்கு சென்றதாகவும் ஆனால் அதை புரிந்துக் கொள்ளாமல் தன்னுடைய தந்தை தன்னை தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறினார். தன்னுடைய நண்பர்கள் எதிரில் அவர் தன்னை அடித்ததால் தன்னுடைய கெத்து குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரௌடியான காரணம்: ஏற்கனவே தங்களது ஏரியாவில் ரௌடியிசம் செய்துவரும் நபர்களை பார்த்தே தங்களுக்கு இம்ப்ரஸ் ஆனதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் கெத்து காட்டியதை பார்த்து தாங்களும் அதே போல ஆக விரும்பியதாகவும் இந்த இளைஞர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட்டாக பல ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











