ஒரே கேள்வியில் முடித்த கோபிநாத்.. பாட்டுக் கச்சேரி செய்த போட்டியாளர்கள்.. நீயா நானா சுவாரஸ்யம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக பல ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது நீயா நானா ஷோ, இந்த நிகழ்ச்சி பல சுவாரஸ்யங்களுடன் வாராவாரம் வீக் எண்ட் கொண்டாட்டமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவையெல்லாவற்றையும் விட நிகழ்ச்சியின் முக்கியமான சுவாரஸ்யமாக நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார்.
வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளுடன் ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது நீயா நானா ஷோ. ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் கோபிநாத். அந்தவகையில் இந்த வாரம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் கொண்டாட்டமாக நீயா நானா ஷோ அமைந்திருந்தது. ஒரு முழுமையான பாட்டுக் கச்சேரியே நடத்தப்பட்டு விட்டது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நீயா நானா ஷோ காணப்படுகிறது. வாரந்தோறும் பலவிதமான சுவாரஸ்யங்களை கொண்ட நிகழ்ச்சியான நீயா நானாவில் மிக முக்கியமாக ரசிகர்களை ஈர்த்துவரும் சுவாரஸ்யமாக இருந்து வருகிறார் கோபிநாத். பல ஆண்டுகளை கடந்து ஒரு நிகழ்ச்சியை ஒரே ஆங்கரால் சக்சஸ்ஃபுல்லாக நடத்த முடியும் என்பதற்கு உதாரணமாக நீயா நானா ஷோவும் ஆங்கர் கோபிநாத்தும் காணப்படுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக கோபிநாத்திற்கு ஒரு எபிசோட்டிற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆங்கர் கோபிநாத்: இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் மற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் கோபிநாத். சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் நீயா நானா ஷோ மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் மிகவும் சிறப்பான தலைப்புடனேயே இந்த நிகழ்ச்சி காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் இந்த வார தலைப்பு பிரபல பாடகர்கள் போல பாடுபவர்கள் மற்றும் திரை இசை ரசிகர்கள் என்று காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு கேள்வியுடன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி முடித்தார் கோபிநாத். இது யாருடைய குரல் மற்றும் அவர்களின் தனித்தன்மை என்ன என்ற கேள்விதான் அது.
நகலிசை பாடகர்கள்: அந்த வகையில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், எஸ்பிபி, மனோ, சைந்தவி, ஸ்ரேயா கோஷல், சுசீலா உள்ளிட்ட பல பின்னணி பாடகர்களின் குரலை அப்படியே பாடி அசத்தினர் பங்கேற்பாளர்கள். இவர்களின் குரல் மற்றும் பாடல்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் நிகழ்ச்சியில் எதிர் தரப்பில் இருந்த ரசிகர்களும் இவர்களின் பாடல்களை கேட்டு சொக்கி தான் போனார்கள். இதனிடையே கோபிநாத் தொடர்ந்து இந்த பாடல்களை கேட்டு கூடவே பாடி மிகப்பெரிய அளவில் ரசித்து நிகழ்ச்சியை என்ஜாய் செய்தார். அவர் இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக மட்டுமில்லாமல் ரசிகராகவும் இணைந்தது தெரியவந்தது.
ரசிகராக மாறிய கோபிநாத்: இந்நிலையில் ஒவ்வொரு பாடகர்களை பாட வைத்து அவர்களுடன் சேர்ந்து எதிர் திசையில் இருந்த ரசிகர்களும் பாடியதை இந்த நிகழ்ச்சியில் மிகவும் கொண்டாட்டமாக பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பாடலும் மிகச் சிறப்பாக ஒரிஜினல் பாடகர்களை அப்படியே கொண்டு வரும் வகையில் அமைந்திருந்தது. மறைந்த பாடகர் எஸ்பிபியின் வாய்ஸிலும் பாடிய பாட்டை கேட்கும் போது ரசிகர்கள் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. இளையராஜாவின் வாய்ஸில் பாடிய பங்கேற்பாளர் ஒருவர், அவரைப்போலவே கெட்டப்பில் இருந்தது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி, நிகழ்ச்சியாக இல்லாமல் கொண்டாட்டமாக மாறியிருந்தது. தான் அதிகமான கேள்விகளுடன் வந்ததாகவும் ஒரே கேள்வியில் நிகழ்ச்சி முடிந்து விட்டதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்த கோபிநாத், மற்றும் ஒரு நிகழ்ச்சியில் அனைவரும் மீண்டும் சந்திக்கலாம் என்று கூறியதையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











