Neeya Naana show: நீயா நானா ஷோவிற்காக 5.75 லட்சம் செலவு செய்த போட்டியாளர்.. அதிர்ச்சியில் கோபிநாத்!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சியாக நீயா நானா ஷோ உள்ளது. இந்த நிகழ்ச்சியை துவக்கம் முதலே ஆங்கர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்புகளில் விவாதங்களை இந்த நிகழ்ச்சி மேற்கொண்டு வருகிறது.
ஒரு விவாதப் பொருளை எடுத்துக் கொண்டு அதன் இருவேறு பக்கங்களை சமமான பங்களிப்போடு இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது.

விஜய் டிவியின் நீயா நானா ஷோ புதிய எபிசோட்: விஜய் டிவியின் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சியாக பத்து ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது நீயா நானா. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ஆங்கர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் இருதரப்பு நியாயங்களை சேர்த்து இந்த நிகழ்ச்சி வழங்கிவருகிறது. காரசாரமான விவாதங்கள் இருந்தாலும் முகம் சுளிக்கும் நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொடுத்து வருகிறார் கோபிநாத்.
வழக்கம்போல இந்த வாரமும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்புடனேயே நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அடிக்கடி தங்க நகைகள் வாங்கும் குடும்பத் தலைவிகள் மற்றும் அதை கேள்வி கேட்கும் குடும்பத் தலைவர்கள் என்ற தலைப்பில் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சி துவங்கியது. சிலர் தங்களது உழைப்பில் நகைச்சீட்டு போட்டு வாங்கியது, அம்மா வீட்டில் கொடுத்தது, மாமியார் வாங்கிக் கொடுத்தது, கணவர் திருமண பரிசாக கொடுத்தது, காதலித்தபோது கொடுத்தது என பல சம்பவங்களை ஒருதரப்பில் அமர்ந்திருந்த பெண்கள் பகிர்ந்துக் கொண்டனர்.
ஒரு பெண், தான் நீயா நானாவின் இன்றைய ஷோவில் கலந்துக் கொள்வதற்காக 8.5 சவரன் பெருமானமுள்ள ஆரத்தை முந்தைய நாள் மாலை கடைக்கு சென்று வாங்கியதாக பெருமையுடன் கூறினார். இதற்காக தான் 5.85 லட்சம் ரூபாயை செலவழித்ததாகவும் அவர் கூறினார். இதைக்கேட்டு கோபிநாத் அதிர்ச்சி அடைந்தார். தான் நிகழ்ச்சியின் ஆங்கராக இருந்தும் ஒரு மோதிரம்கூட இல்லை என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து எதிர்தரப்பில் அமர்ந்திருந்த ஆண்கள், தங்களது அங்கலாய்ப்புகளையும் பகிர்ந்துக் கொண்டனர். ஒருவர் தன்னுடைய மனைவி துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் இருந்து தான் வாங்கி வந்த 7.5 பவுன் நகைகளை கொடுத்துவிட்டு 5 பவுனில் புதிய நகை வாங்கியதாக தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார். அந்த நகைகள் பழையதாக ஆகிவிட்டதாக மனைவி கூற, அதை அழுக்கெடுத்திருந்தால் புதிதாக மாறியிருக்கும் என்றும் அவர் வருத்தத்தை தெரிவித்தார்.
இதனிடையே தான் விரும்பிய ஒட்டியாணத்தை வாங்குவதற்காக ஒரு பெண் 14 கிலோ வரை எடை குறைத்ததை அவரது கணவர் சுட்டிக் காட்டினார். இதையடுத்து பேசிய அந்த பெண், தன்னிடம் ஒட்டியாணம் மட்டும்தான் இல்லாமல் இருந்ததாகவும் அதனால் அதை வாங்க நினைத்து தான் உறுதியுடன் இருந்ததாகவும் தொடர்ந்து 15.5 சவரனில் ஒட்டியாணத்தை வாங்கியதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து ஒட்டியாணம் வாங்கிய பூரிப்பில் உடல் மீண்டும் ஏறிவிட்டால் என்ன செய்வீர்கள் என கோபிநாத் அவரை கலாய்த்தார்.

தொடர்ந்து பேசிய இல்லத்தரசிகள், நகைகள் வாங்குவது தங்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருவதாக தெரிவித்தனர். ஆண்கள் சொத்தாக வீட்டை வாங்கினால் அவர்கள் பெயரில்தான் அதை பதிவார்கள். அதேபோல பெண்களின் சொத்தாக நகைகள் உள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் சந்தோஷத்தையும் தைரியத்தையும் தங்களிடம் உள்ள நகைகள் தங்களுக்கு தருவதாகவும் பெண்கள் குறிப்பிட்டனர். மொய்யாக வைக்கப்படும் தங்கம் மீண்டும் தங்களது வீட்டு விசேஷங்களில் தங்கமாகவே திரும்பும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.


Click it and Unblock the Notifications











