Neeya naana show: அம்மாவை பார்த்து பொறாமையாக இருக்கிறது.. நீயா நானா ஷோவில் சுவாரஸ்யம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி விவாத நிகழ்ச்சியாக வாராவாரம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது நீயா நானா ஷோ.
இந்த ஷோவில் வாராவாரம் ஒவ்வொரு டாப்பிக்கில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன் நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இளமையான அம்மாக்கள் மற்றும் அவர்களின் மகள்களின் உறவுநிலை குறித்து இன்றைய எபிசோடில் விவாதிக்கப்பட்டது.
நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சேனலின் ஒரேயொரு விவாத நிகழ்ச்சியான இந்த ஷோவை ஆங்கர் கோபிநாத் துவக்கம் முதலே தொகுத்து வழங்கி வருவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. வெற்றிகரமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஆங்கர் கோபிநாத்: இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கோபிநாத் காணப்படுகிறார். இந்த நிகழ்ச்சியை தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வதாகவும் தற்போது நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பு படபடப்பை உணர்வதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன் அவர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சாப்பாடு முதல் சமூக நிகழ்வுகள் வரை இந்த நிகழ்ச்சியில் லிவாதிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்படுத்த விரும்பும் மகள்கள்: நிகழ்ச்சியில் இருதரப்பு நியாயங்கள் பேசப்படும் நிலையில், அவர்களை எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளாமல் வழிநடத்தி செல்கிறார் கோபிநாத். இந்நிலையில் இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது நீயா நானா நிகழ்ச்சி. இளமையான அம்மா மற்றும் அவர்களை கட்டுப்படுத்த விரும்பும் மகள்கள் என்ற தலைப்பில் இன்றைய எபிசோட் காணப்பட்டது. இதில் தங்களின் மகள்கள் தாங்கள் சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்திலும் தங்களை கட்டுப்படுத்துவதாக அம்மாக்கள் குறைப்பட்டனர்.
அம்மாவை பார்த்து பொறாமை: தாங்கள் சாப்பிடுவது முதல் தங்களின் உடை வரை அனைத்தையும் தங்களின் மகள்கள் கட்டுப்படுத்துவதாக அவர்கள் கூறிய நிலையில் இதுகுறித்து மகள்களிடம் கோபிநாத் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஒரு இளம்பெண், தன்னுடைய அம்மா தன்னைவிட சிவப்பாக இருப்பதாகவும் தனக்கு அவரை பார்த்தால் பொறாமையாக இருப்பதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து பேசிய அவரது அம்மா, தன்னுடைய மகள் அழகாக இருப்பதாகத்தான் தான் அடிக்கடி கூறுவதாக தெரிவித்தார்.
கோபிநாத் கேள்வி: ஆனால் தன்னுடைய மகள் தன்னுடைய காம்ப்ளக்சில் இருந்து வெளியே வருவதில்லை என்று கூறுவதாக இந்த நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கோபிநாத், இந்த ஜெனரேஷனில் படிப்பு, அறிவு இவற்றில் இல்லாத விஷயம் அழகு, கலரில் என்ன வந்துவிடப் போகிறது என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பேசிய அந்த இளம்பெண் தன்னை எல்லாவிஷயத்திலும் தன்னுடைய அம்மா டாமினேட் செய்வதாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











