Neeya naana show: மனத்தடையை உடைக்கிறார்களா இளமையான மாமியார்கள்.. நீயா நானா ஷோவில் கோபிநாத் அதிரடி!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ஷோவின் இன்றைய எபிசோட் மற்றும் அதற்கான பிரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த வார நிகழ்ச்சியில் மருமகள்கள் மற்றும் மாமியார்கள் இணைந்து பங்கேற்றனர். அத்தை உங்களுக்கு வயசு ஆயிடுச்சு என்று கூறும் மருமகள்கள் மற்றும் நான் இளமையாக தான் இருக்கிறேன் என்று கூறும் மாமியார்கள் இந்த வார எபிசோடில் பங்கேற்று பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் குற்றம் சாட்டிய மருமகள்கள் தன்னுடைய மாமியார் குறித்த பாராட்டுகளையும் தெரிவித்ததை பார்க்க முடிந்தது. தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த உடை, மேக்கப் உள்ளிட்ட பல்வேறு தயக்கங்களை, தடைகளை தன்னுடைய மாமியார் தான் போக்கினார் என்று அவர்கள் பாராட்டியதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது.

Television Neeya naana show Vijay tv

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவில் ஆங்கர் கோபிநாத் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஒரு டாப்பிக்கின் இருதரப்பு நியாயங்களை இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பேசி வருகிறது. அந்த வகையில் இந்த வார ஷோவும் சிறப்பான மற்றும் அன்றாட வாழ்க்கையில் நடந்து வரும் முக்கியமான விஷயத்தை விவாதத்திற்கான தலைப்பாக எடுத்துக் கொண்டுள்ளது. அத்தை உங்களுக்கு வயசு ஆயிடுச்சு என்று கூறும் மருமகள்கள் மற்றும் நான் இளமையா தான் இருக்கேன் என்று கூறும் மாமியார்கள் இந்த ஷோவில் இடம் பெற்று அடுத்தடுத்து வீட்டில் நடக்கும் பல விஷயங்களை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் பகிர்ந்து கொண்டனர்.

இளமையான மாமியார்களால் கிடைக்கும் சுதந்திரம்: இதனிடையே தங்களின் மாமியார் இளமையான மனநிலையில் இருப்பதால் தங்களுக்கு பலவிதமான சுதந்திரங்கள் மாமியார் வீட்டில் கிடைத்து வருவதாக மருமகள்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்ததை பார்க்க முடிந்தது. தன்னுடைய அம்மா வீட்டில் ஜீன்ஸ் உள்ளிட்ட நவநாகரீக உடைகளை அணிவதற்கு தடை இருந்த நேரத்தில் திருமணமாகி மாமியார் வீட்டிற்கு வந்தவுடன், தன்னுடைய மாமியார் இவற்றையெல்லாம் போட்டுக் கொள்ள தன்னை ஊக்குவித்ததை மருமகள் ஒருவர் பகிர்ந்து கொண்டார். இதனிடையே மேக்கப், ஜீன்ஸ், மேக்ஸி போன்றவற்றை சுதந்திரமாக அணிந்துக் கொள்ள முடிவதாக அடுத்தடுத்து மருமகள்கள் உற்சாகமாக பகிர்ந்துக் கொண்டனர்.

ஜீன்ஸ் வாங்கிக் கொடுத்த மாமியார்: இதனிடையே தன்னுடைய லாங் ஹேரை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வெட்டிக் கொள்ள தன்னுடைய அம்மா விடவில்லை என்றும் ஆனால் தன்னுடைய மாமியார் வீட்டில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி சிறிதாக வெட்டிக் கொள்ள தனக்கு சுதந்திரம் இருந்ததாகவும் மற்றொரு மருமகள் தெரிவித்ததையும் இந்த நிகழ்ச்சியின் பிரமோவில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து மற்றொரு மருமகளோ தன்னை ஒரு பெஸ்டிவல் டைமில் கடைக்கு அழைத்துச் சென்று ஜீன்ஸ், மேக்கப் ஐட்டங்கள் போன்றவற்றை தன்னுடைய மாமியாரே வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார்.

மனத்தடையை உடைக்கும் இளமையான மாமியார்கள்: இதையடுத்து இந்த பிரமோவில் பேசிய ஆங்கர் கோபிநாத், ஒவ்வொரு ஆண்மகனுக்கும் தன்னுடைய மனைவியின் உடை மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஒரு தயக்கம் இருக்கும் என்றும் ஆனால் தன்னுடைய அம்மாவே அதற்கு அனுமதி அளிக்கும் போது அவன் அந்த இடத்தில் மிகவும் சிறப்பாக நடந்துக் கொள்வான் என்றும் கோபிநாத் கூறினார். மருமகள் மற்றும் மகனின் மனத்தடையை இளமையான மாமியார்கள் உடைப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X