Neeya Naana show: அண்ணன் தப்பா நெனைச்சிட்டேம்மா.. நீயா நானாவில் பின்வாங்கிய கோபிநாத்!
சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன.
அடுத்ததாக நாளை முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல ஆண்டுகளை கடந்து விஜய் டிவியின் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவருகிறது நீயா நானா ஷோ.

சுவாரஸ்யமான தலைப்புடன் ரசிகர்களை சந்திக்கும் நீயா நானா ஷோ: விஜய் டிவியில் ஏராளமான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் நாளைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் 2 பிக்பாஸ் வீடுகளில் இடம்பெறவுள்ளதால், நிகழ்ச்சி மேலும் டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த அறிவிப்புகளால் தற்போது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதனிடையே நீண்ட வருடங்களாக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது நீயா நானா ஷோ. இந்த நிகழ்ச்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆங்கராக இருந்து வருகிறார் கோபிநாத். வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளுடன் இவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஒரு தலைப்பில் இருவேறு கருத்துடையவர்களை பேசவிட்டு, அவற்றில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யங்களையும் கேள்விகளை ஏற்படுத்துவதில் தேர்ந்தவரான கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் முக்கியமான அம்சமாக உள்ளார்.

இந்த வாரமும் இந்த நிகழ்ச்சி சிறப்பான தலைப்புடன்தான் களமிறங்கவுள்ளது. அதிகமாக ஃபுட் ஆர்டர் செய்யும் பெண்கள் மற்றும் எதிர்க்கும் அவர்களது கணவர்கள் என்ற தலைப்பில் நாளைய தினம் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் ஒருபக்கம் அமர்ந்துள்ள அதிகமாக ஃபுட் ஆர்டர் செய்யும் பெண்களிடம் கோபிநாதன் கேள்விகளை கேட்பதாக அமைந்துள்ளது.
இதெல்லாம்கூட ஆர்டர் பண்றாங்களே என்று கணவர்களை ஆத்திரப்படுத்தும் ஆர்டர்கள் எவை என கோபிநாத் கேட்க, சேர்த்துவைத்த ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்கள். காலை வேளையில் இட்லியெல்லாம் ஆர்டர் செய்து சாப்பிடுவார் தன்னுடைய மனைவி என்று ஒருவர் கூற, மற்றொருவரோ, மாவு ரெடி செய்து கொடுத்தால் தான்தான் தோசை ஊற்றித் தருவேன் என்றும் மாவைக் கூட தன்னுடைய மனைவி தயார் செய்து வைப்பதில்லை என்று அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். அவரது மனைவி தோசை ஆர்டர் செய்வதாக ப்ரமோவில் குற்றம் சாட்டுகிறார்.

சிலர் காஃபி, தண்ணீர், தயிர்சாதம் போன்றவற்றையும் தங்களின் மனைவி ஆன்லைனில் ஆர்டர் செய்வதாக அங்கலாய்க்கின்றனர். இதையெல்லாம் கேட்கும் கோபிநாத், இட்லி ஆர்டர் செய்த பெண்ணைப் பார்த்து, அவர் தன்னுடைய கண்களுக்கு தெய்வமாக தெரிவதாக குறிப்பிடுகிறார். தண்ணீர் வரைக்கும் ஆர்டர் போடுபவர்கள் உள்ள நிலையில், அவர் இட்லி ஆர்டர் செய்வது பரவாயில்லை என்று கூறும் கோபிநாத், அண்ணன் அவரை தவறாக நினைத்துவிட்டதாகவும் தெரிவிப்பதாக ப்ரமோவில் காணப்படுகிறது. மொத்தத்தில் இந்த வார நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











